Skip to main content

"14 முறை முல்லைப் பெரியாறு அணைக்கு சென்று தண்ணீர் திறந்து விட்டேன்"-ஓ.பி.எஸ்.ஸின் அறிக்கை!

Published on 07/11/2021 | Edited on 18/11/2021

 

"I went to Mullaiperiyaru dam 14 times and opened the water" -  O. Panneerselvam Report!

 

முல்லைப் பெரியாறு அணைக்கு 14 முறை சென்று தண்ணீர் திறந்து விட்டு இருக்கிறேன் என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

 

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உள்பட நான்கு அமைச்சர்கள் கடந்த நவம்பர் 5- ஆம் தேதி முல்லைப் பெரியார் அணையை ஆய்வு செய்து விட்டு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், "ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் முல்லை பெரியாரை பற்றி பேச உரிமை இல்லை என்று குற்றம்சாட்டினார். 

 

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (06/11/2021) ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை; பார்வையிடவில்லை என்று அமைச்சர் துரைமுருகனின் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. 2002- ஆம் ஆண்டு முதல் முதல் 2006- ஆம் ஆண்டு வரை பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையிலும், 2011- ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரையிலான பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில், 2013- ஆம் ஆண்டு மற்றும் 2014- ஆம் ஆண்டுகளிலும் 2011, 2012 மற்றும் 2015 முதல் 21 வரை அம்மாவட்ட பகுதி அமைச்சர் என்ற முறையிலும் படகில் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு சென்று அங்கிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை.மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் பாக்கியத்தை பெற்றதோடு பேபி அணை உட்பட அனைத்தையும் ஆய்வு செய்து அனுபவமும் எனக்கு உண்டு என்பதை நான் இந்த தருணத்தில் எடுத்துக்கூற விரும்புகிறேன்.

 

சுருக்கமாக சொல்லவேண்டுமென் றால் 14 முறை நான் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு சென்று தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விட்டு ஆய்வு செய்து இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையே முல்லைப் பெரியாறு அணையுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகும் உண்மை நிலை இவ்வாறு இருக்க. நான் முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டதே இல்லை என்று அனுபவம் வாய்ந்த அமைச்சர் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது என்று பதிலடி கொடுத்திருந்தார்.

 

ஆனால், ஓ.பி.எஸ். கொடுத்திருந்த அறிக்கையில் 14 முறை முல்லை பெரியாறு அணைப் பகுதிக்கு சென்று அங்கிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் பாக்கியத்தை பெற்றேன் என்று கூறியிருக்கிறார். அது முற்றிலும் பொய்யான அறிக்கை என்பது முல்லைப் பெரியாரைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும், அங்கு போய் வந்தவர்களுக்கும் நன்கு தெரியும். பெரியாறு அணையைப் பொறுத்தவரை இரண்டு இடத்தில் மதகுகள் உள்ளன. ஒன்று தேக்கடியில் உள்ளது. இந்த தேக்கடியில் உள்ள மதகுகள் வழியாகத்தான் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கான தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதற்கு படகில் போகத் தேவையில்லை. 

 

OPS

 

முல்லைப்பெரியாறு அணையின் நீர்வரத்து தேங்கக்கூடிய பகுதிதான் தேக்கடி. இதற்கு வாகனத்தில் சென்று விடலாம். இங்கிருந்து தான் அமைச்சர்களும் சரி, எம்.எல்.ஏ.க்களின் சரி, அந்த 5 மாவட்ட விவசாயிகளுக்கு வருடம் தோறும் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். அதுபோல் மற்றொரு மதகு தேக்கடியில் இருந்து படகு மூலம் 15 கிலோமீட்டர் தூரத் தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் 13 ஷட்டர்களுடன் இருக்கிறது. அந்த ஷட்டர்களை திறந்தால் கேரளாவுக்கு தண்ணீர் போகுமே தவிர, தமிழகத்திற்கு அந்த தண்ணீர் வராது. அப்படிப்பட்ட ஷட்டர் வழியாகத்தான், தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி, கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விட்டுபோய்க்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது ஐந்து மாவட்ட விவசாயிகளுக்காக முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு சென்று அங்கிருந்து தான் 14 முறை தண்ணீர் திறந்து விட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ஆனா ஓ.பி.எஸ். கொடுத்திருந்த அறிக்கையில் 14 முறை முல்லை பெரியாறு அணைப் பகுதிக்கு சென்று அங்கிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை , ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடும் பாக்கியத்தை பெற்றேன் என்று கூறியிருக்கிறார். அது முற்றிலும் பொய்யான அறிக்கை என்பது முல்லைப் பெரியாறு  பற்றித் தெரிந்தவர்களுக்கும், அங்குபோய் வந்தவர்களுக்கும் நன்கு தெரியும். பெரியாறு அணையை பொறுத்தவரை இரண்டு இடத்தில் மதகுகள் உள்ளன. ஒன்று தேக்கடியில் உள்ளது.  தேக்கடியில் உள்ள மதகுகள் வழியாகத்தான் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கான தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதற்கு படகில் போகத் தேவையில்லை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்வரத்து தேங்க கூடிய பகுதிதான் தேக்கடி. இதற்கு வாகனத்தில் சென்று விடலாம். இங்கிருந்துதான் அமைச்சர்களும் சரி, எம்எல்ஏக்களும் சரி அந்த 5 மாவட்ட விவசாயிகளுக்கு வருடந்தோறும் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். அதுபோல் மற்றொரு மதகு தேக்கடியில் இருந்து படகு மூலம்  15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் 13 ஷட்டர்களுடன் இருக்கிறது. அந்த ஷட்டர்களை திறந்தால் கேரளாவுக்கு தண்ணீர் போகுமே தவிர தமிழகத்திற்கு அந்த தண்ணீர் வராது. அப்படிப்பட்ட ஷட்டர் வழியாகத்தான் தற்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி கேரளாவுக்கு தண்ணீர் திறந்துவிட்டு போய்க்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது ஐந்து மாவட்ட விவசாயிகளுக்காக முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு சென்று அங்கிருந்து தான் 14 முறை தண்ணீர் திறந்து விட்டேன் என்று ஒரு பொய்யான அறிக்கையை ஓ.பி.எஸ். வெளியிட்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை.

 

 

சார்ந்த செய்திகள்