Skip to main content

எல்ஐசியில் இருந்து பேசுவதாக பெண் குரலில் பேசி மூதாட்டியிடம் 1.5 லட்சம் அபேஸ்... மூன்று பேர் கைது 

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

1.5 lakh abes from an old woman saying that she was speaking from LIC... Three people were arrested

 

எல்ஐசியில் இருந்து பேசுவதாகக் கூறி பெண் குரலில் பேசி மூதாட்டி ஒருவரிடம் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அபகரித்த மூன்று பேரை தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

தேனி மாவட்டம் போடிமெட்டை சேர்ந்த மூதாட்டி ஒருவரிடம் கடந்த ஆண்டு தொலைபேசியில் பேசிய ஒரு பெண் மூதாட்டியின் கணவரின் எல்ஐசி பாலிசி முதிர்வு தொகையை வரவு வைப்பதாகக் கூறி வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை கேட்டுள்ளார். மூதாட்டியும் அதனை நம்பி வங்கி விவரங்களை அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு மூதாட்டியின் மொபைல் போனுக்கு வந்த ரகசிய எண்ணையும் கேட்டுள்ளார். அதனையும் மூதாட்டி அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அந்த மூதாட்டியின் வங்கிக் கணக்கிலிருந்து ஐந்து தவணைகளாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாயமானது. இதுகுறித்து மூதாட்டி போலீசில் புகார் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக வில்சன் குமார், சதாசிவம், முருகன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெண் குரலில் எல்ஐசியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கின் விவரங்களை தெரிந்து கொண்டு பணத்தை திருடியது விசாரணையில் தெரியவந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

மக்களே உஷார்; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Cybercrime cops warn against sharing photos on social media

சமூக வலைத்தளங்களில் போட்டோக்களை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆன்லைன் வர்த்தகம், வேலை வாய்ப்பு, லோன் தருவது, கிரெடிட் கார்டு லிமிட் அதிகரித்து தருவது, தவறான பார்சல் அனுப்பி இருப்பது, பான் - ஆதார் கார்டை வங்கி கணக்கில் சேர்ப்பது, வங்கி ஏடிஎம் கார்டை புதுப்பித்தல், போலியான கஸ்டமர் கேர் நம்பருக்கு போன் செய்வது, மலிவு விலையில் பொருட்கள், ஆன்லைனில் விற்பனை போன்ற எந்த வகையான சைபர் கிரைம் குற்றங்களிலும் பணத்தை இழக்க வேண்டாம்.

சமூக வலைத்தளங்களில் கிவ் - அப் போன்று வரும் லிங்கை கிளிக் செய்து யூசர் ஐடி மற்றும் ஓடிபி எண் பகிர்வது, சமூக வலைத்தளங்களில் தன் போட்டோவை அனைவரும் பார்க்கும்படி பொதுவாக பகிர்வதை தவிர்க்க வேண்டும். ஆன்லைன் மோசடியில் பணம் இழப்பு ஏற்பட்டவுடன் அல்லது 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் உதவி எண் 1930-க்கு புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.