Skip to main content

இது நல்லது அல்ல... ராமதாஸ் இதனை தடுக்க வேண்டும்... வைகோ வேண்டுகோள்

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பொன்பரப்பி வட்டாரத்தில் தலித் மக்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டனர். தங்களுடைய ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டதால் உரிமை கேட்ட தலித் மக்களுடைய வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன, வன்முறை தாண்டவமாடியது. உரிய நடவடிக்கை கோரி, ஏப்ரல் 24ம் நாள், வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக தலைமையிலான எங்கள் தோழமைக் கட்சிகள் அனைத்தும் பங்கேற்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பொது உடைமை இயக்கத்தை சேர்ந்த முத்தரசன், பேராயர் எஸ்றா சற்குணம் போன்றவர்கள் உரை ஆற்றினர். அங்கே தவறான கருத்துகள் எதுவும் பேசப்படவில்லை. 


 

vaiko-ramadoss



எந்த ஒரு சமுதாயத்தின் பெயரையும், முத்தரசன் குறிப்பிடவில்லை. அவர் பேசும்போது, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் ராமதாசை மதித்துத்தான் பேசினார். அவரது பெயரைக்கூடக் குறிப்பிடவில்லை. ஆனால், சிலர் அதைத் தவறாக திரித்து இருக்கிறார்கள். அதனால், பாமக தரப்பில் ஒரு கடுமையான அறிக்கை தந்துள்ளனர். அதைத் துண்டு அறிக்கைகளாகவும் அச்சிட்டுப் பரப்பி வருகிறார்கள். வன்முறையைத் தூண்டுகின்ற வகையில் அந்த கருத்துகள் இருக்கின்றன. அந்த வரிகளை நான் திரும்பக் கூற விரும்பவில்லை. தயவு செய்து அதை பரப்ப வேண்டாம்.

 

முத்தரசன் மிக மென்மையானவர், எளிமையானவர், அன்பானவர், எந்தநேரமும் சிரித்த முகத்தோடு இருப்பவர், யாரிடமும் பகைமை கொள்ள மாட்டார். அத்தகையவருக்கு, அலைபேசியில் அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் வருகின்றன இது தமிழகத்திற்கு நல்லது அல்ல. எனவே, பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த நிலை தொடர விடாமல் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் அமைதியும், சமூக நல்லிணக்கமும் நிலவினால்தான், ஜனநாயகத்துக்கு நல்லது. நமது வருங்காலத் தலைமுறை, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க முடியும். தமிழகத்தின் பொதுநலனைக் கருத்தில் கொண்டு, மிகுந்த பொறுமையோடு இந்தப் பிரச்னையை அணுக வேண்டும்''. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.