Skip to main content

திமுகவில் புதிய பொறுப்பு... இவருக்கு தான் அந்த பதவியா? டென்ஷனில் செந்தில் பாலாஜி!

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த நவம்பர் 10-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், 3,000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டனர். திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, கனிமொழி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.இதில் பொதுச் செயலாளருக்கு இருந்த அதிகாரம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் வயது மூப்பு மற்றும் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் பொதுச் செயலாளர் க.அன்பழகனின் அதிகாரம் திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் தரப்பட்டது. இனி, திமுக நிர்வாகிகள் சேர்க்கை, நீக்கம் தொடர்பான அறிக்கைகளில் ஸ்டாலின் கையெழுத்திடலாம். இதற்கேற்ப திமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
 

dmk



இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சமீபத்தில் பிறந்த நாளன்று, அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் அடித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் முன்னாள், எம்.எல்.ஏ., பரணிகுமார் அடிச்ச போஸ்டரில் 'விரைவில் புதிய பதவி ஏற்க இருக்கும் அண்ணன் நேருவுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்' என போஸ்டர் அடித்து இருந்தனர். திமுக தலைவர் ஸ்டாலினின் மிகவும் நம்பிக்கைக்கு உரியவரான கே.என். நேருவுக்கு சீக்கிரமாக கட்சியில் புதிய பொறுப்பு கொடுக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை தான் பரணிகுமார் போஸ்டரில் கூறியிருப்பாரோ என்று கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பேசி வருகின்றனர். மேலும் திமுக பொது செயலாளர் அன்பழகனின் உடல் நிலை மற்றும் வயது காரணமாக அவருடைய பணியை திமுக தலைவர் ஸ்டாலினின் விசுவாசியான கே.என்.நேருவுக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்து பார்க்க வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளிவருகிறது. இதனால் சமீபத்தில் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி செம டென்ஷனில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 


மேலும் திமுக கட்சியில் இணைந்தவுடன் செந்தில் பாலாஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் அரவக்குறிச்சி இடைத்தேர்தலிலும், கரூர் நாடாளுமன்ற தொகுதியிலும் சிறப்பாக களப்பணி செய்து திமுகவிற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். தற்போது கே.என்.நேருவிற்கு புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டால் செந்தில் பாலாஜிக்கு திமுகவில் பொறுப்புகள் குறைய வாய்ப்பு ஏற்பட்டு விடுமோ என்ற டென்ஷனில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பற்றி திமுக வட்டாரங்களில் விசாரித்த போது, புதிய பொறுப்புகள் கட்சியில் யாருக்கு கொடுத்தாலும் அது மற்றவர்களை பாதிக்காமல் இருக்கும் வகையில் தான் திமுக தலைமையில் முடிவு எடுக்கப்படும். மேலும் கட்சிக்காக உழைப்பவர்களுக்கு எப்போதும் கட்சியில் முக்கியத்துவம் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
    
 

 

சார்ந்த செய்திகள்