மகாராஷ்டிராவில் அகில இந்திய இந்துத்துவாக் கட்சியான பா.ஜ.க.வுக்கு, மாநில இந்துத்துவாக் கட்சியான சிவசேனா அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தொடங்கியிருப்பதாக சொல்கின்றனர். மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வோடு கைகோத்திருந்த சிவசேனா, அங்கு ஏற்பட்ட குழப்படியான அரசியல் நிலவரங்களால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸின் ஆதரவோடு, குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சியில் அமர்ந்திருக்கு என்கின்றனர். மஹாராஷ்டிராவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றினால் ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு தேவைப்பட்டது. ஆனால் சிவசேனாவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் பாஜக தள்ளப்பட்டது. இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த சிவசேனா, காங்கிரஸ் கூட்டணிக்கு கட்சி தாவ ஒரு சில பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சில மாநிலங்களவை உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர். ஆட்சிக்கு வர முடியாத சூழலால் பாஜக எம்.எல்.ஏ.க்கள் பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர்.
மேலும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் பலரும் தங்கள் சொத்துக்களை பாதுகாக்கவே பா.ஜ.க-வில் இணைந்து பல கோடி செலவு செய்து எம்.எல்.ஏ-க்கள் ஆனவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது ஆளும் சிவசேனா தங்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உண்டு என்று கட்சி தாவ முடிவெடுத்துள்ளனர். பாஜகவின் எம்.எல்.ஏ.க்களின் சிலரின் முடிவால் பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. கர்நாடகாவில் ஆட்சியை கலைக்க அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அரசுக்கு எதிராக வாக்களிக்க வைத்து பின்பு பாஜக கட்சியில் இணைத்து இடைத்தேர்தலில் பாஜக சின்னத்தில் போட்டியிட வைத்தது போல் மஹாராஷ்டிராவிலும் திட்டம் போட்டு வருகிறது பாஜக. ஆனால் தற்போது பாஜக திட்டத்தை சிவசேனா கையில் எடுத்து பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகி வருவதாக கூறுகின்றனர். மேலும் அமித்ஷா வழக்குகளையும் தூசி தட்டி வருவதாகவும் சொல்கின்றனர்.