Skip to main content

“இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படும்”  -த.வெ.க. மாநாட்டில் அறிவிப்பு!

Published on 27/10/2024 | Edited on 27/10/2024
“Bilingual policy will be followed” - T.V.K. Announcement at the conference

நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மாலை 4 மணிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அப்போது மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த ராம்ப் வாக் மேடையில் ராம்ப் வாக் சென்றார். அப்போது அங்கிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், ‘தளபதி, தளபதி’ என முழக்கமிட்டு உற்சாகப்படுத்தி வரவேற்பு அளித்தனர். மேலும் தொண்டர்கள் அவரை நோக்கி வீசிய அக்கட்சியின் துண்டை வாங்கி தோளில் அணிந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதன் தொடர்ச்சியாக மாநாட்டு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக் கம்பத்தில் அக்கட்சியின் கொடியை விஜய் ஏற்றினார். பின்னணியில் கட்சியின் பாடல் இசைக்க லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சி ததும்ப த.வெ.க கொடியை விஜய் ஏற்றி வைத்தார். இதனையடுத்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் கட்சியின் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த உறுதிமொழியை அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் வாசிக்க விஜய், தொண்டர்கள் மற்றும் மேடையில் இருந்த கட்சியின் நிர்வாகிகளும் தங்கள் வலது கையை நெஞ்சில் வைத்தபடி இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்.

“Bilingual policy will be followed” - T.V.K. Announcement at the conference

இதனையடுத்து அக்கட்சியின் நிர்வாகி சம்பத்குமார்  த.வெ.க.  கொள்கையை வாசித்தார். அதில், “கோட்பாடு : பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும். கொள்கை : மக்கள் யாவரும் பிறப்பால் சமமே. பாரபட்சமற்ற சமநிலை சமத்துவ சமூகம் படைத்தல் என்பது எங்களுடைய கோட்பாடாகும். தமிழகத்தின் வெற்றி கழகத்தின் குறிக்கோள் : மதம், சாதி, நிறம், இனம், மொழி பாலின அடையாளம் பொருளாதாரம் என்கிற தனி அடையாளங்களுக்குள் மனித சமூகத்தை சுருக்காது தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் தனிமனித சமூக பொருளாதார அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தி எல்லோருக்கும் எல்லாமுமான சமநிலை சமூகம் உருவாக்குவது தமிழக வெற்றி கழகத்தின் குறிக்கோளாகும். மதசார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் ஜனநாயகம் ஒரு நாட்டின் மக்களை அவர்கள் சார்ந்த இனம், மதம், மொழி, சாதி பாலினம் என்று பாகுபடுத்தாமல் சம உரிமைகளை அவர்களுக்கு உத்தரவாதப்படுத்தி சாத்தியப்படுத்துவது.

ஆட்சி அதிகாரம்: சட்டம், நீதி அதிகாரம், அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தி வெகு ஜன மக்களின் அடிப்படை சுதந்திரங்களை பறிக்கும் மாநில, ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நடத்துவது. சம்மதர்ம, சமூக நீதி, இட ஒதுக்கிட அல்ல, விகிதாச்சார பதுங்கீடு உண்மையான சமூக நீதிக்கு வழிவகுக்கும். ஏற்ற தாழ்வுகளை அகற்றி சாதி முழுமையாக ஒலிக்கப்படும் காலகட்டம் வரை அனைத்து பிரிவினருக்கும் அனைத்து துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரநிதித்துவம் வழங்குவதே தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக நீதியாகும்.

“Bilingual policy will be followed” - T.V.K. Announcement at the conference

சாதி, மதம், இனம், நிறம், மொழி, பொருளாதாரம், வர்க்கம் மற்றும் பாலின சமத்துவத்தை கூடிய உரிமை எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள். பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் என எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்கு சமமானவர்கள் மற்ற சமமானவர்களே என்பது நமது சமத்துவம், மதச்சார்பின்மை, மதச்சார்பற்ற தனிப்பட்ட மத நம்பிக்கையும் தனி இடத்தை அனைத்து மதத்தவரையும், மத நம்பிக்கை அற்றவரையும் சம சமமாக பாவிக்கும் அரசு, ஆட்சி நிர்வாகம், மதச்சார்பின்மை  கொள்கையாகும். மாநில தன்னாட்சி உரிமை : அந்தந்த மாநில மக்களின் தலையாய உரிமை. மாநில தன்னாட்சிக்குட்பட்ட உரிமைகளை மீட்பது என்பது தமிழக வெற்றி கழகத்தின் மாநில தன்னாட்சி உரிமையாகும். இரு மொழிக் கொள்கை. தாய்மொழியாகிய தமிழ் உலகத்திற்கான இணைப்பு மொழியாகிய ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை தமிழக வெற்றி கழகம் பின்பற்றுகிறது.

தமிழே ஆட்சி மொழி, தமிழே வழக்காடு மொழி, தமிழே வழிபாட்டு மொழி, தமிழ் வழி கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். அரசியல் தலையீடு அற்ற அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் நிர்வாகம், அரசுத்துறை மற்றும் தனியார் துறை என்று எந்த துறையிலும் அரசியல் தலையீடற்ற லஞ்ச லாவண்யம், ஊழலற்ற நிர்வாகம் கொண்டு வரவும் மத, இன மொழி வர்க்க பேதமற்ற வகையில் கல்வி, சுகாதாரம், தூய்மையான காற்று, தூய குடிநீர் என்பது எல்லோருக்கும் ஆன அடிப்படை உரிமை.

சுற்றுச்சூழல், இயற்கை வளங்களை பாதுகாப்பது அரசின் தலையாய கடமை. பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை, மனித குலத்தின் உடல் நலன்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் உள்ள பிற்போக்கு சிந்தனைகளை நிராகரிப்பது. தீண்டாமை ஒழிப்பு வழர்க்கங்களை நிராகரிப்பதே தீண்டாமை ஒழிப்பின் முதல் படியாகும். இயற்கை வள பாதுகாப்பு சூழ்நிலைகள் காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய இயற்கைக்கு ஊறு விளைவிக்காத பகுதி சார்  மாநில வளர்ச்சி பரவலாக்கப்படும்.போதையில்லா தமிழகம், உற்பத்தி திறன், உடல் நலம் கெடுக்கும் சமூக சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் போதை அறவே இல்லாத தமிழகம் படைத்தல் அடிப்படை கொள்கைகள் ஆகும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்