Skip to main content

13 சுற்று முடிவு; இளங்கோவன் தொடர்ச்சியாக முன்னிலை

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

Round 13 results; Ilangovan leads continuously

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஏறத்தாழ 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

 

இந்நிலையில், 13 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் 96,596 வாக்குகள் பெற்று தொடர்ச்சியாக முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 38,392 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். ஈவிகேஎஸ். இளங்கோவன் மற்றும் தென்னரசுவிற்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 58 ஆயிரத்து 204 வாக்குகளாக இருப்பதால் இளங்கோவன் வெற்றி உறுதியாகி உள்ளது. 

 

காலையிலேயே அதிருப்தியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறிவிட்டார். 13 ஆவது சுற்று முடிவில் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 7,984 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 949 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“குஷ்புவுக்கு விரைவில் பிச்சை எடுக்கும் நிலைமை வரும்” - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
EVKS Ilangovan said Kushbu will soon find herself in a state of begging

சென்னை செங்குன்றத்தில் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினரும், தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் எவ்வளவு போதைப்பொருட்கள் வந்துள்ளது. இந்த போதைப் பொருட்கள் ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் சொல்லியுள்ளனர். இதற்கு முதலமைச்சர் என்ன பதில் கொடுக்கப்போகிறார். இன்றைக்கு தாய்மார்களுக்கு 1000 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சை போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?” எனப் பேசினார். குஷ்புவின் இந்த பேச்சு பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஷ்புவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று (13-03-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி, ஒரு சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். எப்படியாவது தமிழ்நாட்டு மக்களை மயக்கி, அவர்களிடம் வாக்குகளை பெற்று தமிழகத்தில் டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்று முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். நாட்டு மக்கள் தன்னுடைய குடும்பம் என்று சொல்லக்கூடிய மோடிக்கு நான் சவால் விடுகிறேன். முடிந்தால், தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று டெபாசிட் வாங்கினால் உங்களை நாங்கள் பிரதமராக ஏற்றுக்கொள்கிறோம். 

மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத் தொகையை பிச்சை காசு என்று குஷ்பு சொல்கிறார். பிச்சை எடுப்பதில் குஷ்பு ஆர்வமாக இருக்கிறார். விரைவில் அவருக்கு அந்த நிலைமை வரும். பொய், பித்தலாட்டத்தின் மொத்த உருவமே மோடி தான். போதை பொருட்கள் எங்கிருந்து வருகிறது என்றால், குஜராத்தில், மோடியின் நண்பரான அதானியின் துறைமுகத்தில் இருந்து தான் இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.