Skip to main content

ஆட்சி மாறினால் அதிமுக என்ன ஆகும்?

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

கடந்த சில நாட்களாகவே இந்திய முழுவதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவாதங்களும்,சர்ச்சைகளும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும்,பொது மக்கள் மத்தியிலும் எழுப்பியுள்ளது.தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில் மத்தியில் பாஜக அணிக்கும், மாநிலத்தில் திமுக அணிக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் உளவுத்துறை மூலம் வந்த ரிப்போர்ட்டில் தொங்கு பாராளுமன்றம் அமைவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று தகவல் சொல்லப்படுகிறது. மேலும்  மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் சூழல் உருவானால், மாநிலத்தில் அதிமுக ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலுக்கு போகும்.
 

eps



ஒரு வேளை அதிமுக ஆட்சி  கவிழ்ந்தால் இப்போது இருக்கும் பெரும்பாலான ஆளும் கட்சி அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் வழக்குகளால் சிறைக்கு செல்வார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆட்சி மாறினால் அதிமுகவில் இருக்கும் அதிருப்தி நிர்வாகிகள் வேறு கட்சிக்கு செல்ல இருப்பதாகவும் தகவல் வருகிறது.இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பிலும் திமுக அணியே வெற்றிபெறும் என்று வந்துள்ளதால் ஆட்சி மாற்றம் வருமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.தினகரனின் அமமுக கட்சி இந்த இடைத்தேர்தலில்  மூன்று இடங்களுக்கு மேல் வெற்றிபெற்றால் முதல்வரை தீர்மானிக்கும் கட்சியாக மாறும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்