Skip to main content

“சூத்திரர்களை பெண்களை இழிவானவர்கள் ஆக்கியது மனு” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

"Sutras have made women despicable, it is Manu Shastra" - Chief Minister M.K.Stalin

 

“சூத்திரர்களை பெண்களை இழிவானவர்கள் ஆக்கியது மனு” என தோள் சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

கடந்த 1822 ஆம் ஆண்டு சாதிய கட்டமைப்பிற்கு எதிராக நடந்த தோள் சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா திடலில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்றனர். பீட்டர் அல்போன்ஸ், கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.

 

இந்நிகழ்வில் பேசிய முதலமைசர் மு.க.ஸ்டாலின், “தோள் சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு விழாவில் நான் பங்கெடுப்பதில் மிகுந்த பெருமைப் படுகிறேன். இன்று கல்வியில் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் நாகரீகத்தில் தமிழ்நாடு எவ்வளவோ உயரங்களை எட்டியுள்ளது. இத்தகைய உயரத்தில் தான் 50 ஆண்டுகள் முன் இருந்தோமா என்றால் இல்லை. இப்படிப்பட்ட உயரத்தில் தான் 100 ஆண்டுகள் முன் இருந்தோமா என்றால் இல்லை. ஒரு காலத்தில் அனைத்து உணவு விடுதிகளுக்கும் அனைவரும் போய்விட முடியாது. பஞ்சமர்கள் உள்ளே வரக்கூடாது என்றும் நாடகக் கொட்டகைகள் போன்றவற்றிலும் உள்ளே வரக்கூடாது என்றும் போர்டுகள் மாட்டப்பட்டு இருக்கும். ரயில் போக்குவரத்து அறிமுகமானபோது ஒவ்வொரு வர்ணத்திற்கும் தனித்தனி பெட்டிகள் ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 80 வயது கடந்தவர்களுக்கு தான் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தில் நடந்த மாற்றங்கள் குறித்து தெரியும். அப்படிப்பட்ட கால மாற்றத்தை உணர்த்தும் நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

 

நேற்று கீழடியில் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தேன். உலகம் நாகரீகம் அடைவதற்கு முன் ஆடை அணிந்து வாழ்ந்தது மட்டுமல்ல அணிகலனும் அணிந்து வாழ்ந்த இனம் தான் தமிழினம். அதைத்தான் கீழடி காட்டுகிறது. ஆனால், இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்பினால் தமிழினத்தின் பண்பாடு சிதைக்கப்பட்டு விட்டது. மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் சாத்திர சம்பிரதாயங்களின் புராணங்களின் பெயரால் மனிதர்களை மனிதர்கள் பாகுபடுத்திவிட்டார்கள். ஆணுக்கு பெண் அடிமை என்று ஆக்கிவிட்டார்கள். சூத்திரர்களை பெண்களை இழிவானவர்கள் ஆக்கியது மனு. தீண்டாமையை புனிதமாக்கினார்கள். பெண்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டார்கள். இதற்கு எதிராக அருள் பிரகாச வள்ளலாரும், அயோத்திதாசரும், வைகுண்டரும், பெரியாரும் முன்னெடுத்த சீர்திருத்தங்கள் தான் தமிழகத்தை தலை நிமிர வைத்துள்ளது. பக்தி வேறு பாகுபாடு என உணர்த்தியவர்கள் இந்த தலைவர்கள். 

 

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் அனுபவித்த துன்பங்களும் துயரங்களும் மற்ற பகுதிகளில் இல்லாதது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் மார்பில் சேலை அணியக்கூடாது என்ற இழி நிலை நிலவியது. அதையும் மீறி சேலை அணிந்த பெண்கள் தாக்கப்பட்டார்கள். இதைவிட கொடுமையாக ‘முலை வரி’ என்ற வரியை போட்டார்கள். அப்படி வரி கட்டாத காரணத்தால் தன் மார்பையே அறுத்தெடுத்தாள் ஒரு பெண். இந்த வரிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. சீர்திருத்த கிறிஸ்துவ இயக்கத்தினர் இந்த போராட்டத்திற்கு துணையாக இருந்தனர். வைகுண்டர் ‘தாழக் கிடப்போரை தற்காப்பது தான் தர்மம்’ என சொன்னார். மேலும், சிதறிக் கிடந்த மக்கள் ஒன்று சேர்ந்து போராடினால் அனைத்து துன்பங்களும் ஒழியும் எனச் சொன்னார். இதன் விளைவாக 1859 ஆம் ஆண்டு தோள் சீலை அணியலாம் என்ற உத்தரவை அரசர் போட்டார். போராட்டத்தில் போராடியவர்கள் எல்லாம் நாம் வணங்கத்தக்கவர்கள்.” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.