Published on 04/03/2023 | Edited on 04/03/2023

அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் மார்ச் ஒன்பதாம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து பல்வேறு நிர்வாகிகள் கேள்வி எழுப்பலாம் என தகவல் வெளியாகி உள்ளது.