Skip to main content

5,000 உணவகங்களை தன் பட்டியலில் இருந்து நீக்கிய சொமாட்டோ...!

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

உணவு டெலிவரி சேவையை வழங்கிவரும் இந்திய நிறுவனமான சொமாட்டோ, தான் உணவு ஆர்டர்களை எடுக்கும் உணவகப் பட்டியலில் இருந்து 5,000 உணவகங்களை நீக்கியுள்ளது. இந்த உணவகங்கள் எல்லாம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரசான்றிதழ் (FSSAI) அமைப்பின் சுகாதார சான்றிதழ் பெறவில்லை, அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

zomato

 

சொமாட்டோ நிறுவனம் சில மாதங்களுக்கு முன் 150-க்கும் மேலான நகரங்களில் உள்ள உணவகங்களில் (FSSAI) அமைப்பின் சுகாதார சான்றிதழ் தொடர்பான சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 


இது குறித்து சொமாட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மோஹித் குப்தா கூறுகையில், ஒரு நாளைக்கு 400 புது உணவகங்களை எங்கள் தளத்தில் சேர்க்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவையும், அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி படுத்துவது எங்கள் கடமை. அதனால்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்