2018ம் ஆண்டுக்கான சர்வதேச நாடுகளின் பொருளாதார நிலை குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையின்படி, 20.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில் உள்ள சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு 14 டிரில்லியன் அமெரிக்க டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 5.1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் ஜப்பான் இந்த தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளன. 4.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் ஜெர்மனி 4ம் இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் கடந்த ஆண்டு ஐந்தாம் இடத்தில் இருந்த இந்தியா, தற்போது அதனை இங்கிலாந்திடம் இழந்துள்ளது. இந்தப் பட்டியலில் 2.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இங்கிலாந்தும், பிரான்சும் முறையே 5 மற்றும் 6ம் இடங்களில் உள்ளன. இவற்றிற்கு அடுத்து 2.8 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இந்தியா 7 ஆம் இடத்தில் உள்ளது.