Skip to main content

‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி எப்போது? - ஐசிஎம்ஆர் தகவல்!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

fg

 

இந்தியாவில் தற்போது அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதால், பூஸ்டர் டோஸ் தற்போதைய நிலையில் பொருத்தமாக இருக்காது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தாக்குதல் தற்போது சீராக குறைந்துவரும் நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவருகிறது. இதுவரை 85 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் நாடு முழுவதும் பொதுமக்களுக்குப் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே, உலக நாடுகள் சிலவற்றில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு மீண்டும் பூஸ்டர் டோஸ் (மேலும் ஒரு தவணை) தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு அந்நாட்டு அதிபர் உள்ளிட்டோருக்குப் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 

இந்நிலையில், இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள ஐசிஎம்ஆர் மருத்துவர் பல்ராம் பார்கவா, "இந்தியாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்துவதே தற்போதைக்கு எங்களின் இலக்காக உள்ளது. எனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என்பது தற்போதைய நிலையில் பொருத்தமானது அல்ல" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்