Skip to main content

பெண்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய காவல்துறை; அதிர்ச்சியளிக்கும் வீடியோ

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

Uttar Pradesh police brutally attacked women

 

அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய உத்தரப்பிரதேச போலீசாரின் வீடியோ பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்தியா முழுவதும் அம்பேத்கரின் சிலை உடைக்கப்படும் சம்பவம் பல காலமாக நடந்து வருகிறது. இதில் முதன்மையான உத்தரப்பிரதேச மாநிலத்தை அடுத்து பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அம்பேத்கர் சிலை தகர்க்கப்படுவதும் அதனால் அந்தந்த பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாகும்.  

 

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அம்மாநிலத்தில் அம்பேத்கர் நகர் மாவட்டம் அருகே வாஜித்பூர் என்ற கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு பூங்காவில் பாபாசாகேப் அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டிருந்தது. கடந்த சனிக்கிழமையன்று யாரோ முகம் தெரியாத மர்ம நபர்கள் அம்பேத்கரின் சிலையைச் சேதப்படுத்தியுள்ளனர்.

 

இது குறித்துத் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அம்பேத்கரின் சிலையைச் சுற்றி எல்லைச் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனையடுத்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் திடீரென அவர்கள் மீது தடியடி நடத்தினர். அங்குத் திரண்டிருந்த பெண்கள் மீது, ஈவு இரக்கமின்றி லத்தியாலும், வாழை மட்டையாலும் அங்கிருந்த போலீசார் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 4 போலீசாருக்கும், 5 பெண்களுக்கும் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தமிழக போலீசார் சரியாகச் செயல்படவில்லை” - சசிகலா பேச்சு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Tamil police are not working properly" - Sasikala speech

தமிழக போலீசார் சரியாகச் செயல்படவில்லை எனச் சசிகலா பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி 90 சதவிதம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். தற்போது அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். தமிழக போலீசார் சரியாக செயல்படவில்லை.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி நடத்திய போது அவர் ஒரு பெண் முதல்வர் என்பதால் அரசியல் கட்சியினர் பலரும் அவரை விமர்சனம் செய்தனர். தற்போது ஜெயலலிதா புகைப்படம் பலருக்கும் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய பணிகளே காரணம்” எனத் தெரிவித்தார். 

Next Story

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு; பாதுகாப்பு கேட்டு புதுமண தம்பதிகள் தஞ்சம் 

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
newly married couple took shelter in Police  seeking protection

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே மசிகம் கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தசாமி. இவரது மகன் சரண். கோவிந்தசாமி தேங்காய் உரிக்கும் கூலி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பெண்னை சரண் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். 

இதன் பிறகு ஊருக்கு வந்த இருவரையும் பெண் வீட்டார் கடுமையாக அடித்து துன்புறுத்தி ஊருக்குள் வரக்கூடாது எனத் துரத்தி அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த ஜோடி, திருமண கோலத்துடன் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்துள்ளது. இது குறித்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.