Skip to main content

ரயில் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவு - ஒரு லட்சம் அபராதம் விதிப்பு!

Published on 13/01/2020 | Edited on 14/01/2020

ரயிலில் கெட்டுபோன உணவு வழங்கிய ரயில்வே ஒப்பந்ததாரருக்கு ஐஆர்சிடிசி ஒரு லட்சம் அபராதம் விதித்துத்துள்ளது. நாட்டிலேயே அதிவிரைவு ரயிலான தேஜஸ் ரயில் குறிப்பிட்ட இடங்களில் இயக்கப்படுகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை, மதுரை இடையே இந்த ரயில் இயக்கப்படுகின்றது. இந்த ரயில் மணிக்கு 130 முதல் 200 கிலோ மீட்டர் வரை செல்லும் ஆற்றல் உடையது. 



இதற்கிடையே கோவாவில் இருந்து மும்பை சென்ற ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு கெட்டு போய் இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த ரயிலில் சென்ற பயணிகள் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். புகாரின் உண்மையை தன்மையை சோதித்த அதிகாரிகள் அதில் உண்மை இருப்பதை கண்டறித்தனர். மேலும், தரமற்ற உணவினை வழங்கிய ரயில்வே ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்சம் அராதம் விதித்தனர். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஓடும் ரயிலில் இருந்து கழன்று சென்ற பெட்டிகள் - பயணிகள் அதிர்ச்சி

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Coaches derailed from Kerala Ernakulam Express train

கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து ஜார்கண்ட் மாநிலம் டாடா நகர் வரை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ரயில் நேற்று(28.6.2024) காலை எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு சாலக்குடியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. இந்த ரயிலில் 20 பெட்டிகள் உள்ள நிலையில் அதில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். காலை 10 மணியளவில் வள்ளத்தோடு பாலம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக ரயில் என்ஜினில் இருந்து பெட்டிகள் கழன்று தனியாகச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக செயல்பட்டு என்ஜின் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினர். பாலத்தைக் கடக்க ரயிலின் வேகம் குறைக்கப்பட்டதால், கழன்று சென்ற ரயில்பெட்டிகள் சிறிது தூரம் சென்று தானாகவே நின்றது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சூர்,பாலக்காடு ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள் கழன்ற சென்ற ரயில் பெட்டிகளை மற்றொரு ரயில் என்ஜின் உதவியோடு இழுத்து வந்து, சம்பந்தப்பட்ட ரயிலுடன் இணைத்தனர். இதையடுத்து 4 மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது. 

இதுகுறித்து பேசிய ரயில்வே உயர் அதிகாரிகள், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். ஓடும் ரயிலில் இருந்து பெட்டிகள் கழன்று  சென்றது பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

25 கி.மீ வரை வாலிபரின் உடலை இழுத்து வந்த ரயில்; காட்பாடியில் பரபரப்பு சம்பவம்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
train dragged the boy body for 25 km

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா வரை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம்(17.6.2024) நள்ளிரவு சுமார் 11:45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்பொழுது ரயில் இஞ்சின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் வாலிபரின் பிணம் ஒன்று சிக்கி இருந்தது. இதனைக் கண்டு பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதனைக் கண்டு கீழே இறங்கிய இஞ்சின் டிரைவர் இரயிலில் வாலிபர் பிணம் சிக்கி இருந்ததைக் கண்டுபிடித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி இரயில்வே இருப்பு பாதை போலீசார் இரயில் இஞ்சினில் சிக்கி இருந்த வாலிபர் பிணத்தை மீட்டனர். அப்பொழுது வாலிபர் உடலில் இரண்டு கால்களும்  துண்டாகி இருந்தது மேலும் இரயிலில் சிக்கி இழுத்து வந்ததால் உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்களும் தலையில் பலத்த காயம் பட்டிருந்தது.

இறந்த வாலிபர் சிவப்பு நிற டி-ஷர்ட், நீல நிற  பேண்ட் அணிந்திருந்தார். இறந்த வாலிபர் யார் என்பது தெரியவில்லை மேலும் எந்த இடத்தில் சிக்கினார் என்பதும் தெரியவில்லை. போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். கால்கள் இல்லாத நிலையில் மீட்கப்பட்டதால், காட்பாடி இரயில்வே போலீசார் தண்டவாள பகுதியில் வாலிபரின் கால்களை தேடிச் சென்றனர் .

ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்த போது இஞ்சின் முன் பக்கத்தில் வாலிபரின் பிணம் இல்லை அதற்கு பிறகு வாலாஜா முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையில் தான் இஞ்சினில் வாலிபர் சிக்கி இருந்துள்ளார். சுமார் 25 கிலோமீட்டர் அங்கிருந்த வாலிபரின் பிணம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு இழுத்து வந்துள்ளது தெரியவந்தது. இறந்த வாலிபர் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு ஏதாவது காரணமா என காட்பாடி இரயில்வே இருப்பு பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .சுமார் 25 கிலோமீட்டர் இஞ்சினில் வாலிபர் உடல் இழுத்து வந்த சம்பவம்  காட்பாடி இரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.