Published on 26/07/2019 | Edited on 26/07/2019
நாட்டில் உள்ள ஒருசில விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும் என ஏற்கனவே தகவல் வந்த நிலையில், தற்போது இதுகுறித்து மக்களவையில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சரான ஹர்தீப் சிங் புரி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க எம்.பி ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "விமான நிலையங்களை அதன் தகுதி அடிப்படையில் தனியார் மயமாக்குதல் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதன்படி தனியார் மயமாக்கலுக்காக நாடு முழுவதிலுமிருந்து 6 முக்கிய விமான நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 3 விமான நிலையங்களை தனியாருக்கு அளிக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. 6 விமான நிலையங்களுக்காக 9 நிறுவனங்களிடம் இருந்து ஏல டெண்டர்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 3 விமான நிலையங்கள் அதானி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.