பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பால்கோட் பகுதியில் இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்களோ, மக்களோ யாரும் இறக்கவில்லை என சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் பாஜக மகளிர் அணியினர் இடையே சுஷ்மா சுவராஜ் நேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், "புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பால்கோட்டில் தற்காப்புக்காகவே இந்தியா தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து சர்வதேச நாடுகளுக்கும் இந்தியா தெரியப்படுத்தியது. பால்கோட் தாக்குதலில் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தினருக்கு எதுவும் ஆகா கூடாது என விமான படையிடம் தெரிவிக்கப்பட்டது. இந்தியா நடத்திய இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களோ அல்லது பொது மக்களோ இறக்கவில்லை. ஜெய்ஷ்-ஈ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனர்" என தெரிவித்தார்.