Skip to main content

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - முதல்வர் வீடு மீது கல்வீச்சு!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால்,  பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.  எந்த அமைப்போ, அரசியல் கட்சியோ போராட்டம் அல்லது முழு அடைப்போ அறிவிக்கவில்லை என்றாலும், ஆங்காங்கே தன்னிச்சையான போராட்டங்கள் வெடித்தன. நெடுஞ்சாலைகளில் மரக்கட்டைகளையும், பழைய டயர்களையும் போட்டு பொதுமக்கள் எரித்து வருகின்றனர்.



இதற்கிடையே, நேற்று இரவு  நடைபெற்ற போராட்டத்தின் போது, லக்கிநகர் பகுதியில்  உள்ள அசாம் முதல்வர் இல்லத்தின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்வீச்சில், சில ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.  அதேபோல், பாஜக எம்.எல்.ஏ பிரசந்தா புகான் மற்றும் கட்சியின் தலைவர் சுபாஷ் தத்தா ஆகியோரின் இல்லத்தையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.  அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு நிலவுவதால், அங்கு பதற்றமான சூழலே காணப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்