Skip to main content

452 வழக்குகள்...2061பேர் கைது....சபரிமலை போராட்டம்....

Published on 26/10/2018 | Edited on 26/10/2018
sabarimalai


உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சபரிமலி கோவிலுக்குள் பல பெண்கள் தரிசனம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால், ஐயப்பன் கோவிலுக்கு வந்த பக்தர்கள், இந்து அமைப்புகளை சேர்ந்த பலர் அப்படி வந்த பெண்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் போராட்டம் செய்தனர். பலர் அப்படி கோவிலுக்கு வந்தவர்களை தடுத்தனர். பின்னர் அது வன்முறையாகவும் மாறியது. கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். வாகனங்களை தாக்கி, கண்ணாடிகளை உடைத்தனர்.பம்பை மற்றும் சபரிமலையில் 250க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்திருந்தனர். மேலும் சந்தேக நபர்களின் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டு உள்ளனர். இதனை அனைத்து மாவட்ட தலைமையகத்திற்கும் அனுப்பி வைத்து அவர்களை அடையாளம் காண சிறப்பு குழுக்களை அமைத்து உள்ளதாக டிஜிபி கூறியுள்ளார்.
 

சபரிமலை போராட்டம் மற்றும் வன்முறையில் 250க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதுவரை 1400 பேர் இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 

தற்போது மொத்தமாக 2061 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 452 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்