Skip to main content

ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

august bank holiday

 

ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை விடப்படவுள்ளன. இதில் வார இறுதி நாட்களும், சில குறிப்பிட்ட மாநிலங்களிலும், நகரங்களிலும் மட்டும் விடப்படும் விடுமுறைகளும் அடங்கும்.

வங்கிகளுக்கான ஆகஸ்ட் மாத விடுமுறை பட்டியல் வருமாறு;

1)ஆகஸ்ட் 1, 2021 - ஞாயிறு விடுமுறை.

2) ஆகஸ்ட் 8, 2021 - ஞாயிறு விடுமுறை.

3) ஆகஸ்ட் 14, 2021 - இரண்டாவது சனிக்கிழமை (வார இறுதி விடுமுறை)

4) ஆகஸ்ட் 13, 2021 - தேசபக்தர் தினம். (மணிப்பூரின் இம்பால் நகரங்களில் வங்கிகள் செயல்படாது)

5) ஆகஸ்ட் 15, 2021 - ஞாயிறு விடுமுறை.


6) ஆகஸ்ட் 16, 2021 - பார்சி புத்தாண்டு. (பெலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூர் நகரங்களில்  வங்கிகள் செயல்படாது).


7) ஆகஸ்ட் 19, 2021 - முஹர்ரம் (ஆஷுரா) விடுமுறை. (அகர்தலா, அகமதாபாத், பெலாப்பூர், போபால், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் செயல்படாது.

8) ஆகஸ்ட் 20, 2021 - முஹர்ரம் / முதல் ஓணம் பண்டிகை. (பெங்களூரு, சென்னை, கொச்சி மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் செயல்படாது)


9)  ஆகஸ்ட் 21, 2021 - திருவோணம் (கேரளாவில் வங்கிகள் செயல்படாது)

10) ஆகஸ்ட் 22, 2021 - ஞாயிறு விடுமுறை.

11) ஆகஸ்ட் 23, 2021 - ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி. (திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் வங்கிகள் செயல்படாது)

12) ஆகஸ்ட் 28, 2021 - நான்காவது சனிக்கிழமை (வார இறுதி விடுமுறை).

13) ஆகஸ்ட் 29, 2021 - ஞாயிறு விடுமுறை.

14) ஆகஸ்ட் 30, 2021 - ஜன்மாஷ்டமி / கிருஷ்ணா ஜெயந்தி. (அகமதாபாத், சண்டிகர், சென்னை, டேராடூன், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் செயல்படாது).

15) ஆகஸ்ட் 31, 2021 - ஸ்ரீ கிருஷ்ணா அஷ்டமி. (ஹைதராபாத்தில் வங்கிகள் செயல்படாது).

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கிக் கடன் மோசடி - குஜராத் தொழிலதிபர் கைது

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Bank Loan Fraud - Gujarat Businessman Arrested!

 

வங்கிகளில் சுமார் 3,300 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

குஜராத் மாநிலம், சூரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கப்பல் கட்டும் நிறுவனம் ABG Shipyard Limited. இந்த நிறுவனத்தின் தலைவராக உள்ள ரிஷி கமலேஷ் அகர்வால், எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ. உள்ளிட்ட 28 வங்கிகளில் 22,842 கோடி ரூபாய் கடனாக வாங்கி விட்டு வேண்டுமென்றே, திரும்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

 

கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் 2017- ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரிஷி கமலேஸ் அகர்வாலும், அவரது கூட்டாளிகளும் குற்றச்சதி, மோசடி அரசுப் பதவிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. 

 

மேலும் வங்கிக் கடனை சில குறிப்பிட்ட, நோக்கத்திற்காக பெற்றுக் கொண்டு பிற வழிகளில் செலவு செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பான, புகாரில் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

 

இவரது வங்கிக் கடன், 2016- ஆம் ஆண்டு ஜூலை 2019- ஆம் ஆண்டுக்கு இடையே வாரா கடனாக அறிவிக்கப்பட்டிருந்தது. வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனாக வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, நீரவ் மோடி, முகுல் சோக்ஷி போன்றோரின் வரிசையில் ரிஷி கமலேஷ் அகர்வாலும் இணைந்திருப்பது தெரிய வந்தது. 

 

 

Next Story

தொடர்ந்து உயரும் பணவீக்கம்: வட்டி விகிதங்கள் மேலும் உயர வாய்ப்பு! 

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

Inflation continues to rise: Interest rates are likely to rise further!

 

எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பண வீக்கம் உச்சம் தொட்டிருக்கும் நிலையில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மேலும் உயர்த்தும் என்று நிதிச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். 

 

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் காரணமாக, உணவு மற்றும் எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நாட்டில் சில்லரை பணவீக்கம் அரசின் கணிப்பைத் தாண்டி 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக 7.8% ஆக அதிகரித்துள்ளது. இதனால் விலைகளை கட்டுப்பாட்டில் வைக்க எதிர் வரும் மாதங்களில் வட்டி விகிதங்களை அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

விலை உயர்வு எதிரொலியாக, அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.4% அதிகரித்திருந்தது. இருப்பினும் பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் முதல் வட்டி விகிதங்களை மேலும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றன. குறிப்பாக, எரிபொருள்களின் விலை உயர்வு 10.8% ஆக இருக்கிறது. 

 

நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் பெரும் பகுதி இறக்குமதியை நம்பியே இருப்பதால் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவது சவாலாகவே இருந்து வருகிறது. இந்தோனேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்திருப்பது பணவீக்கத்தை சமாளிப்பதில் பெரும் சவாலாக இருந்து வருகிறது.