Skip to main content

கடல் போல் காட்சியளிக்கும் கர்நாடகா; பருவ மழையால் சாலைகள் எங்கும் வெள்ளம் 

Published on 31/08/2022 | Edited on 31/08/2022

 

Karnataka looks like a sea; roads are flooded everywhere due to monsoon rains

 

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகளை மழை நீர் அதிக அளவு தேங்கி இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கர்நாடகாவில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது.   குறிப்பாக பெங்களூரு, பெங்களூரு புறநகர், உடுப்பி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  முக்கிய சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்திற்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி  நீர் சாலைகளில் புகுவதால் 2 அடிக்கும் அதிகமான நீர் சாலைகளில் காணப்படுகிறது. சுரங்கப்பாதைகள் மொத்தமும் நீரில் மூழ்கியுள்ளன.

 

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெல்ல நீர் சூழ்ந்துள்ளது. சர்ஜாபுறம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதிகளில் 3 அடிக்கும் மேல் வெல்ல நீர் சூழ்ந்துள்ளது.

 

சாலைகளில் தேங்கும் வெள்ள நீரில் போக்குவரத்துக்கள் சிக்கிக் கொள்வதும் நடைபெறுகிறது. சாலைகளில் ஏற்பட்ட வெள்ள  நீரில் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் அடித்து செல்லப்பட்டது. மீட்பும் படையினரும் தன்னார்வத் தொண்டர்களும் வெள்ளத்தில் சிக்கியவர்களை ட்ராக்டர், தீயணைப்பு வாகனம் முதலானவற்றைக்கொண்டு  மீட்டுக் கொண்டுவரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

மரங்கள் ஆங்காங்கு சாய்ந்து விழுவதாலும் ஒசகரே ஏரி கனமழையால் நிரம்பியதால் மழை நீர் சாலைகளில் வழிந்தோடுவதாலும் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு  போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.