Skip to main content

நாசா மற்றும் உதவிய நாடுகளுக்கு இஸ்ரோ நன்றி

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

 ISRO thanks NASA and countries for their support

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றது. தொடர்ந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்துள்ளது  சந்திரயான் - 3.

 

சந்திரயான் -3  தரையிறங்கும் காட்சிகளை நேரலையில் பார்ப்பதற்காக இன்று மாலை 5.20 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சியில் நேரலையை துவங்கியுள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு லேண்டர் வந்தவுடன் தானியங்கி மூலம் நிலவில் தரையிறக்குவதற்கான கட்டளையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்க தயாராகி வந்தனர். தற்போது அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்ட நிலையில் தரையிறங்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பலகட்ட நடவடிக்கைகளுக்கு பின் வெற்றிகரமாக நிலவின்  தென் துருவத்தில் இறங்கி நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு இந்தியா என சாதித்தது சந்திரயான் - 3.

 

நாடுமுழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு உதவிய நாசா ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனங்கள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் உதவிக்கு இஸ்ரோ தற்போது நன்றி தெரிவித்துள்ளது. சந்திரயான் - 3 விண்கலத்தை அனுப்ப அமெரிக்காவின் நாசாவும், ஐரோப்பிய விண்வெளி முகமையும் உதவி செய்துள்ளது. நிலவுக்கு செல்வதற்கான சந்திரயான் - 3 மேற்கொண்ட 3.84 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணம் முழுவதும் நாசாவும், ஈ.எஸ்.ஏவும் உதவி செய்துள்ளது. நிலவை சுற்றி வரும் தாய்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்விலும் நாசா மற்றும் ஈ.எஸ்.ஏவின் உதவிகள் முக்கியமானது. உலகின் பல இடங்களில் இருந்து அமெரிக்காவின் தரை கட்டுப்பாட்டு நிலையங்கள் சந்திரயான் - 3ஐ கண்காணிக்கின்றன. அமெரிக்கா நிறுவியுள்ள பிரம்மாண்டமான ரேடியோ ஆன்டெனாக்கள் வழி சந்திரயான் - 3ன் பயணம் கண்காணிக்கப்படுகிறது.

 

பிரெஞ்சு கயானாவில் உள்ள ஐரோப்பிய விண்வெளி முகமையும் 15 மீட்டர் ஆண்டெனாவின் உதவியையும் இஸ்ரோ நாடியது. அதேபோல் இங்கிலாந்தின் கூன் கில்லியில் உள்ள 35 மீட்டர் விட்ட ஆண்டெனாவும் சந்திரயானை கண்காணிக்கும் பணியில் உதவியது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்காணிப்பை தொடங்கியது ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'Insat 3DS' satellite started monitoring!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த 17 ஆம் தேதி (17-02-2024) மாலை 5.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி. எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 2 ஆயிரத்து 274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வானிலை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் தனது கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலமேற்பரப்பு, வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தரவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள்; பிரதமர் மோடி அறிவிப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Prime Minister Modi's announcement on Indian astronauts in space

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று (27-02-24) காலை கேரளா சென்றார். அதனையடுத்து, அவர் அங்குள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குச் சென்று ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை ஆய்வு செய்தார். அவருடன், கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இருந்தனர். 

இதனையடுத்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்களைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷுசுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு மிஷன் லோகா பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தேர்ந்தெடுக்கப்பட்ட 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள் தான்” என்று கூறினார்.