Skip to main content

ரஷ்யா- உக்ரைன் போர்: பிரிட்டன் போர் விமான பயிற்சியில் இருந்து இந்தியா விலகல்!

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

indian air force

 

பிரிட்டனில் வரும் மார்ச் மாதம் 6ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கோப்ரா வாரியர் என்ற பெயரில் போர் விமான பயிற்சி நடைபெறவுள்ளது. பல்வேறு நாடுகள் பங்குபெற இருந்த இந்த பயிற்சியில், இந்தியாவும் பங்கேற்க இருந்தது. இதற்காக இந்திய விமானப்படையின் ஐந்து எல்சிஏ தேஜாஸ் போர் விமானங்கள் பிரிட்டன் செல்லவிருந்தன.

 

இந்நிலையில் சமீபத்திய நிகழ்வுகள் காரணமாக, இந்த போர் பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலையடுத்து ரஷ்யா மீது பிரிட்டன் கடும் பொருளாதர தடைகளை விதித்து வரும் சூழலில், பிரிட்டனில் நடக்கும் போர் பயிற்சியில் இருந்து விலகும் முடிவை இந்தியா எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்து குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்