Skip to main content

நரபலியும்; மசாலா தடவிய மனித மாமிசமும்...! நான்கு வயது குழந்தையைக் கொன்ற கொடூரம்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

Kerala two woman passed away case

 

கேரளாவில் நடக்கும் நரபலி சம்பவங்கள் திடீரென்று தற்போது முளைத்து விடவில்லை 1973களிலேயே அது துளிர் விட்டிருக்கிறது என்கிறார்கள் கொல்லம் நகர் பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள்.

 

கொச்சியை சேர்ந்த மந்திரவாதி முகம்மது ஷாபி. பில்லி, சூனியம் வைப்பு எடுப்பு மூலமாக குடும்ப சாபத்தைப் போக்க வைப்பது போன்றவைகளை மாந்திரீகத்தின் மூலமாக மக்களை வசியப்படுத்தி பணம் பார்த்து வந்திருக்கிறார். மக்களை வசியப்படுத்துகிற வித்தையறிந்த முகம்மது ஷாபி, ஸ்ரீதேவி என்ற பெண் பெயரில் போலி பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி அதன் மூலம் குடும்ப சாபம் விலக, வருமானம் பெருகி செல்வம் கொழிக்க, வியாபாரம் விருத்தியடைய என்று கவர்ச்சியான வசீகரப் பேச்சுகளின் மூலம் வீசிய வலையில் சிக்கியவர் தான் லைலா.

 

 

Kerala two woman passed away case

 

நாட்டு மருந்துகளுடன் அலோபதி மாத்திரைகளையும் கலந்து மசாஜ், உடம்பு வலி போக்குதல் என்ற இரண்டாம் ரக வைத்தியங்களைச் செய்து வந்த பகவல்சிங் ஒரு அரசியல் கட்சியிலுமிருக்கிறார். கணவனின் வைத்தியத்தில் போதுமான வருமானம் கிடைக்காமல் போகவே குறுக்கு வழியில் பணம் தேடுகிற சிந்தனையிலிருந்த லைலாவுக்கு மந்திரவாதி முகம்மது ஷாபியின் தொடர்பு கிடைக்க, வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டவர், லைலாவுடன் நெருங்கிய தொடர்பையும் வைத்துக் கொண்டுள்ளார். பின்னர் பகவல்சிங்குடன் அறிமுகமான மும்மது ஷாபி, அவர்களிடம் நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் என ஆசை வார்த்தை காட்டி பகவல்சிங்கிடம் வெயிட்டான தொகையைப் பெற்றுக் கொண்டு, பலி கொடுப்பதற்கு வயிற்றுப்பாட்டிற்காக ஆதரவற்ற லாட்டரி டிக்கெட் விற்கிற பெண்களின் மீதான பார்வையைத் திருப்பியிருக்கிறார். ஆலுவா பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்றுக் கொண்டிருந்த ரோஸ்லின் என்ற பெண்ணை பணத்தாசை காட்டி அழைத்து வந்து ஈவு இரக்கமற்ற வகையில் கொடூரத்தனமாக அறுத்துக் கொன்று குரளி பூஜை, கடவுளைத் திருப்தி செய்ய, செல்வம் பெருக என்ற பசப்பு வார்த்தைகளால், யாகத்திற்குப் பின்பு புனித நீரை வீடு முழுக்கத் தெளிக்கிறதைப் போன்று நரபலி கொடுத்த அறை முழுக்க அந்தப் பெண்ணின் மார்பகத்தை அறுத்தெடுத்து பீறிட்ட சூடான ரத்தத்தைத் தெளித்திருக்கிறார்.

 

முதல் நரபலிக்குப் பின்பு சொன்னது நடக்கவில்லை. செல்வம் பெருகவில்லையே என்ற பகவல்சிங்கிடம், குடும்பத்தில் சாபமிருக்கு. முழுசா தீரணும். அதுக்கு இன்னொரு நரபலி கொடுக்கணும் என்ற முகம்மது ஷாபி, அதற்காக முந்தைய தேடலைப் போன்றே பிழைப்பிற்காக அங்கே லாட்டரி சீட் விற்ற தர்மபுரியைச் சேர்ந்த பத்மாவை ஆசை வார்த்தை சொல்லி கூட்டி வந்து துடிக்கத் துடிக்க நரபலியைக் கர்ண கொடூரமாக நடத்தியிருக்கிறார்கள். அறை முழுக்க அந்த அப்பாவிப் பெண்ணின் ரத்த அபிஷேகம் நடத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து ரோஸ்லின் உடலை 40 துண்டுகளாக வெட்டிப் புதைத்ததைப் போன்றே பத்மாவின் உடலை 56 துண்டுகளாக வெட்டி உப்புக் கண்டம் போட்டிருக்கிறார்கள்.

 

 

Kerala two woman passed away case

 

முதல் நரபலியில் சாபம் முழுசா தீரலை. இப்ப சாபம் விலகி செல்வம் பெருகணும்னா, சாமிக்குப் படைத்த நரமாமிசத்தை இரண்டு பேரும் சாப்பிடணும், என்று சொன்னபோது தம்பதியர் யோசித்திருக்கிறார்கள். கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று  கூசாமல் மந்திரவாதி ஷாபி சொன்னதைக் கேட்டு தம்பதியரான பகவல்சிங்கும் லைலாவும் உப்புக் கண்டம் போட்ட மனித மாமிசத்தை மசாலாவாக்கி சமைத்துச் சாப்பிட்ட கொடூரமும் நடந்தேறியிருக்கிறதாம்.

 

இரண்டு நரபலி சம்பவங்களும் அடுத்தடுத்த கால அவகாசத்தில் நடந்தாலும், ரோஸ்லினைக் காணவில்லை என உத்திரப்பிரதேசத்திலிருந்து வந்த அவரது மகள் மஞ்சு கொடுத்த புகாரில் காலடி காவல் நிலைய போலீசாரின் புலன் விசாரணையில் முன்னேற்றமில்லை. பின்னர் பத்மாவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட போலீசாருக்கு, பத்மாவை முகம்மது ஷாபி காரில் அழைத்துச் செல்கிற சி.சி.டி.வி.காட்சி கிடைக்கவே அதன் மூலம் இரண்டு நரபலி சம்பவங்களும் வெளிவந்து கேரளாவைப் பதற அடித்திருக்கின்றன.

 

Kerala two woman passed away case

 

சம்பவத்திற்குப் பின்பும் மந்திரவாதி முகம்மது ஷாபியும், லைலாவும் வழக்கம் போல் எந்தவித பதற்றமும் சலனமுமில்லாமல் நெருக்கமாக இருந்திருக்கிறார்களாம். உழன்று கொண்டிருந்த பகவல்சிங் விஷயத்தை வெளிப்படுத்தி விடுவார். மாட்டிக் கொள்வோம் என்று இருவரும் பதறியிருக்கிறார்கள். அதற்கு நேரம் வைக்காமல் பகவல்சிங்கை போட்டுத்தள்ளிவிட வேண்டும் என்று மந்திரவாதி முகம்மது ஷாபியும் லைலாவும் திட்டம் போட்டிருக்கும் சமயத்தில்தான் போலீசிடம் மொத்தமாய் அனைவரும் சிக்கியிருக்கின்றனர். இதனால் மூன்றாவது நரபலியும் தடுக்கப்பட்டிருக்கிறதாம்.

 

Kerala two woman passed away case

 

கேரளாவில் நரபலிகள் நடப்பது இது முதல் சம்பவமல்ல, என்று விவரிக்கிற சமூக நல ஆர்வலர்களோ, 1967ன் போது கேரள மாநிலம் அமைக்கப்பட்டது. 1973களில் கொல்லம் நகரின் மத்தியப் பகுதியில் அழகேசன் என்பவர் வெளி ஏரியாவிற்குச் சென்று சாமியாராக மாறி ஊர் திரும்பியிருக்கிறார். தன் வீட்டின் முன்னே சாமி பீடத்தை அமைத்து சிறிய குடில் போட்ட அழகேசன் அதற்கு பூஜை புனஸ்காரங்களைச் செய்யத் தொடங்கியதோடு, ஜோசியம், பில்லி, சூனியம் எடுப்பு, வசியமாக்குதல், அருள்வாக்கு என்று அப்பாவி மக்களை வசீகரப்படுத்தி பிழைப்பை ஓட்டி வந்திருக்கிறார்.

 

தன் சாமியார் தொழிலில் அடுத்த கட்டத்திற்கு நகர விரும்பிய அழகேசன் தனக்கு சக்தி கிடைக்கவும், அதற்காக கடவுளைத் திருப்தி செய்ய நரபலி கொடுப்பதற்கான ஏற்பாட்டில் இறங்கியிருக்கிறார். நரபலி கொடுப்பதற்காக தன் வீட்டின் முன்புற பக்கமுள்ள வீட்டின் 4 வயது தலைச்சன் குழந்தையான தேவதாசனை யாருக்கும் தெரியாமல் அழைத்து வந்து நடுப்பகல் சூரியன் மத்திக்கு வருகிற நேரத்தில் கழுத்தையறுத்து நரபலி கொடுத்து, குழந்தையின் ரத்தத்தை சாமி சிலையில் அபிஷேகம் செய்து, குடிசை முழுக்க ரத்தத்தைத் தெளித்திருக்கிறானாம். பின்னர் குழந்தை தேவதாசனின் உடலை தன் வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டு, அந்த இடத்தை மறைப்பதற்காக வாழைக் கன்றுகளையும் நட்டிருக்கிறார்.

 

Kerala two woman passed away case

 

இதற்குள் குழந்தை தேவதாசனைக் காணாமல் தவித்த அவனது பெற்றோர்கள் போலீசில் புகார் செய்திருக்கிறார்கள். விசாரணையில் முன்னேற்றமில்லையாம். அதே சமயம் சாமியார் அழகேசன் சலனமேயில்லாமல் தொழிலை மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சாமியார் அழகேசனின் வீட்டின் பின் பக்கம் வாழைக்கன்று திடீரென்று ஊன்றப்பட்ட தகவல் போலீஸ் வரை போக, சந்தேகத்தின் அடிப்படையில் அவரைத் தீவிரமாகப் போலீஸ் விசாரித்தபோது தான், குழந்தை தேவதாசன் நரபலி கொடுக்கப்பட்டது வெளியே தெரியவந்து மக்களைப் பதற அடித்திருக்கிறது. விரைவாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் தீர்ப்பின்படி சாமியார் அழகேசன் தூக்கிலிடப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.

 

பில்லி, சூனியம், செய்வினை, செல்வம் பெருக ஏமாறுபவர்கள் இருக்கிற வரையில் ஏமாற்றுபவர்களின் தொழிலில் பசுமை தான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Rs. 4 crore confiscation issue; CBCID case registration

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் கடந்த 23 ஆம் தேதி (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இது குறித்து நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று (28.04.2024) கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை சம்பவம்; தனிப்படை போலீசார் அதிரடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
avadi jewelry incident police in action

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு கடந்த 15 ஆம் தேதி (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

avadi jewelry incident police in action

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை போலீசார் கண்டுபிடித்திருந்தனர். 

avadi jewelry incident police in action

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி தினேஷ் குமார் மற்றும் சேட்டன்ராம் ஆகியஇருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது சென்னையில் தங்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.