Skip to main content

ஆளுநர் அழைக்காவிட்டால் காங்.,- மஜத உச்சநீதிமன்றத்தை நாட முடிவு!

Published on 16/05/2018 | Edited on 17/05/2018
sitha

 

 

 

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காவிட்டால் குடியரசுத்தலைவரை நாடலாம் என்று தொலைபேசி மூலம் தேவகவுடாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் மம்தா பானர்ஜி.   

 

பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக்கூட்டத்தில் , ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மஜதவும் இந்த முடிவையே எடுத்துள்ளது.  ஆளுநர், குடியரசுத்தலைவர் மாளிகைகள் முன்பு எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு நடத்தவும் இவ்விரு கட்சிகளூம் திட்டமிட்டுள்ளன.

 

 

கர்நாடக சட்டசபை தேர்தலில் 222 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,   பாஜக சார்பில் எடியூரப்பாவும், மஜத+காங்., சார்பில் குமாரசாமியும் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.  இருவரில் யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்ற பதைபதைப்பு கர்நாடக அரசியலில் கூடிக்கொண்டே இருக்கிறது.

 

இந்நிலையில், காங்கிரசாரும், மஜதவினரும் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்