
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவதில் கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது. அந்த வகையில் புதிதாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மையும் அணைக்கட்டியே தீருவோம் என உறுதியாக கூறியுள்ளார். இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதலமைச்சர் பேசியதாவது, “மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடகாவிற்கு முழு உரிமை உண்டு. ஏற்கனவே மேகதாது அணைக்காக கர்நாடக அரசு தயாரித்த முதல் திட்ட அறிக்கையை உரிய அனுமதி பெற்று அணையை கட்டியே தீருவோம்" என்றார்.
மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் அறிவித்ததை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், " அது பற்றி எல்லாம் தனக்கு கவலை இல்லை. மேலும் மேகதாது அணைக்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி எல்லாம் கவலை இல்லை. எனது கவலையெல்லாம், மேகதாதூவில் அணைக்கட்ட வேண்டும் என்பது தான். திட்ட அறிக்கைக்கு அனுமதி பெற்று மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றுவோம். யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் சாப்பிடாவிட்டாலும் அதுபற்றி கவலை இல்லை” என்றார்.