Skip to main content

உ.பி தேர்தல்: சமாஜ்வாடிக்கு பின்னடைவு - கட்சி தாவிய மேலவை உறுப்பினர்கள்!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

samajwadi mlc

 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. 2024ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், உத்தரப்பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தச்சூழலில் டைம்ஸ் நவ் - போல்ஸ்ட்ராட் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, பாஜக 239 - 245 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைக்கவுள்ளது. சமாஜ்வாடி 119 - 125 இடங்களைக் கைப்பற்றவுள்ளது. அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி 28 - 32 இடங்களில் வெல்லும் எனவும் டைம்ஸ் நவ் - போல்ஸ்ட்ராட் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன

 

இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி, சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். தற்போது இணைந்துள்ள நால்வரும் தத்தம் பகுதிகளில் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், அவர்களின் வருகை பாஜகவிற்கு வலு சேர்க்கும் எனக் கருதப்படுகிறது. அதேநேரத்தில் இது சமாஜ்வாடிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்