Published on 03/01/2025 | Edited on 03/01/2025
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சென்னையில் 'காதலிக்கவில்லை என்றால் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி விடுவேன்' என மிரட்டல் விடுத்த இளைஞர்கள் இருவர் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றிய சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் மீது இரண்டு இளைஞர்கள் பெட்ரோல் ஊற்றிவிட்டு மிரட்டல் விட்டுள்ளனர். காதலிக்கவில்லை என்றால் கொளுத்தி விடுவேன் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பெண் கொடுத்த புகாரின் பேரில் வால்டாக்ஸ் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன், ஜேம்ஸ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.