Skip to main content

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ரஞ்சன் கோகாய்!

Published on 16/11/2019 | Edited on 17/11/2019

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் அயோத்தி வழக்கு, ஆர்.டி.ஐ, ரபேல் உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கி னார். இவரது பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த சூழலில் குடும்பத்துடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதையொட்டி ரேனிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி மலை வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
 

j



முன்னதாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரேனிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து காரில் திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரை வழிபட்டார். அங்கு ராஞ்சன் கோகாய்க்கு தீர்த்த பிரசாதங்கள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு சென்றார். அங்கு தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி வரவேற்று பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற ஏழுமலையான் சகஸ்ரதீப அலங்கார சேவையில் கலந்து கொண்டார். நேற்று இரவு திருமலையில் தங்கினார். இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஏழுமலையானை வழிபட்டார்.

 

சார்ந்த செய்திகள்