Skip to main content

மத மாற்ற விவகாரம்: பாஜக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

Delhi High Court opinion in the case of conversion

 

மதம் மாற சட்டப்படி தடையில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

 

பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் கொடுத்து மதம் மாற்றுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்ககோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா இந்த வழக்கை தொடுத்திருந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மனுவில் குறிப்பிட்டுள்ளதுபோல கட்டாய மதமாற்றம் நடப்பதற்கான தரவுகள் எங்கே எனக் கேள்வியெழுப்பியது. மேலும், சமூக வலைதளங்களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், கட்டாயப்படுத்தாத பட்சத்தில் மதம் மாற எந்தத் தடையும் இல்லை எனத் தெரிவித்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்