Skip to main content

கரோனா எதிரொலி... சவக்குழிக்கு முன்பதிவு செய்ய வேண்டிய அவலம்...

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

delhi burial ground issue


கரோனாவால் உயிரிழப்புகள் அதிகரித்துவரும் நிலையில், டெல்லியில் சவக்குழிகளுக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்திப் பதிவு செய்ய வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. 
 


இந்தியாவில் கரோனா பரவல் கடந்த ஒரு வாரத்தில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் சூழலில், இன்றைய நிலவரப்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,66,598 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,466 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியா முழுவதும் கரோனா பாதித்த 1,29,917 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியத் தலைநகரான டெல்லியில் கரோனா பாதித்து உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சவக்குழிகளுக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்திப் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

டெல்லியில் அமைந்துள்ள சில இஸ்லாமிய மக்களுக்கான மாயணங்களில், உடல்களை அடக்கம் செய்யத் தேவையான இடம் கிடைக்காமல் அப்பகுதி இஸ்லாமியர்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மயானங்களில், சவக்குழிகளுக்கு முன்பதிவு செய்வது அல்லது ஏற்கனவே தங்களது குடும்பத்தினருக்குப் பயன்படுத்தப்பட்ட இடத்தை மீண்டும் பயன்படுத்துவது போன்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுமாதிரி செய்யப்படும் முன்பதிவில் ஒரு சவக்குழிக்கு ரூ.50ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 
 


 

சார்ந்த செய்திகள்