Skip to main content

'66.16 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனை'- ஐ.சி.எம்.ஆர். தகவல்!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020

 

coronavirus number of samples tested icmr

 

நாடு முழுவதும் நேற்று வரை (19/06/2020) மொத்தம் 66,16,496 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

 

அதேபோல் நாடு முழுவதும் நேற்று (19/06/2020) மட்டும் 1,89,869 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் நேற்று (19/06/2020) வரை மொத்தம் 8,27,980 மாதிரிகள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் ஒவ்வொரு நாளும் கரோனா பரிசோதனையை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்