Skip to main content

காங்கிரஸ் சர்தார் வல்லபாய் படேலுக்காக என்ன செய்தது?

Published on 31/10/2018 | Edited on 31/10/2018
mp cm

சர்தார் வல்லபாய் படேலின் 143 வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் நர்மதா அணையில் உலகிலேயே உயர்ந்த சிலையை இன்று திறந்துவைக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் பேசுகையில்,  ”காங்கிரஸ் சர்தார் வல்லபாய் படேலுக்கான மரியாதையை கொடுத்தது இல்லை. இந்தியவாவை ஒருங்கிணைத்தது யார் என்று இது மறந்துவிட்டது. இன்று உலகிலேயெ உயர்ந்த சிலையாக சர்தாருக்கு எழுப்பி, உலகறிய செய்த மோடியை நான் வாழ்த்துகிறேன். இதுதான் அவருக்கு செலுத்தும் சரியான மரியாதை ”என்று கூறினார்.
 

மேலும் அவர் உறையில், “சர்தார் இல்லையென்றால் இந்தியா இன்று ஒருங்கிணைந்து இருக்காது. ஜம்மு காஷ்மீர் ஜவஹர்லால் நேருவிடம் கைகளுக்கு செல்லாமல் சர்தார் வல்லபாய் படேல் கைகுக்கு சென்றிருந்தால், ஜம்மு காஷ்மீரில் மூன்றில் ஒரு பங்கு தற்போது பாகிஸ்தான் பிடியில் இருந்திருக்காது. சர்தார் வல்லபாய் படேல் பிரதமர் ஆகாதது இந்தியாவின் துரதிர்ஷ்டம்.  காங்கிரஸ் அவருக்கு என்ன செய்தது என்பதை மீண்டும் சொல்ல தேவையில்லை” என்றார்.

சார்ந்த செய்திகள்