கர்நாடகா மாநில, ராஜ ராஜேஸ்வர் நகர் தொகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏவான முனிரத்னா, எச்.ஐ.வி நோயை பரப்ப சதி செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பா.ஜ.க எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான முனிரத்னா, பாலியல் வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார். இவர் மீதான வழக்கை, எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில், அம்மாநில சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வுக் குழு 2481 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில், கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ.க தலைவருமான ஆர்.அசோகாவுக்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட ரத்தத்தை ஊசி மூலம் செலுத்த முனிரத்னா திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சாட்சியங்களை அழித்ததாகவும், குற்றவியல் சதி செய்ததாகவும் ஆர் சுதாகர், பி ஸ்ரீனிவாஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் பி ஐய்யண்ணா ரெட்டி ஆகியோரையும் பெயரிட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.