
மனைவி மற்றும் 3 குழந்தைகளை பா.ஜ.க தலைவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டம் சங்கதேடா கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஷ் ரோஹிலா. இவர் பா.ஜ.க செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, 3 குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில், தனது மனைவி வேறொரு நபருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக யோகேஷ் ரோஹிலா சந்தேகித்துள்ளார். இதனால், கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று, தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து, போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த நபர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, பா.ஜ.க தலைவர் யோகேஷ் ரோஹிலாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.