
'கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் ஏக்நாத் ஷிண்டேவும் பாஜகவும் பதவி விலகி இடைத்தேர்தலை சந்திக்க தைரியம் உள்ளதா?' என மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தனது மகனின் எதிர்காலத்தை அழிக்க முயன்றவர்களை ஆதரிப்பது ஏன்? என அதிருப்தி எம்எல்ஏக்களிடம் கேள்வி எழுப்பினர். கடந்த இரண்டரை ஆண்டுகளாக தன்னையும், தனது குடும்பத்தையும் அவமதிப்பு செய்த பாஜகவுடன் கைகோர்த்தது ஏன்? எனது குடும்பத்தை எதிர்ப்பதற்காக கூட்டணி ஆட்சி அமைத்துள்ள ஏக்நாத் ஷிண்டேவும் பாஜகவும் பதவியை விலகிவிட்டு இடைத்தேர்தலைச் சந்திக்க தயாரா? என சவால் விடுத்தார்.