Skip to main content

மறுசீரமைக்கப்படும் ஆசியாவின் முதல் பெண்கள் பள்ளி 

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

asia first girl school renovated by smart city scheme in puducherry 

 

புதுச்சேரியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர்கள் விரும்பி பார்க்கும் புராதன கட்டிடங்களை பாதுகாக்கவும், அதை புனரமைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பிரஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல் என வர்ணிக்கப்பட்ட புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. அதில் 1827 ஆம் ஆண்டு புதுச்சேரி கடற்கரையோரம் உள்ள தூமாஸ் தெருவில் கட்டப்பட்ட பிரெஞ்சு பெண்கள் பள்ளியாகும். இது ஆசியாவிலேயே பெண்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் பள்ளி என அறியப்படுகின்றது. பிரெஞ்சு ஆட்சி வெளியேறியவுடன் இதை புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை ஏற்று அரசு பெண்கள் பள்ளியாகவே நடத்தி வந்தது.

 

தற்போது கட்டிடத்தின் உறுதித் தன்மையை இழந்ததால் கடந்த 8 ஆண்டுகளாக இந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டு இங்கு பயின்ற மாணவிகள் வேறு அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்கள். இந்த கட்டிடத்தை உணவகமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதை பழமை மாறாமல் அதே பெருமையுடன் பெண்கள் பள்ளியாக அமைக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.

 

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு பொலிவுறு நகர மேம்பாட்டுத் திட்டத்தின் படி 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசுப் பள்ளியை ரூ.8.22 கோடி செலவில் பாரம்பரிய மிக்க கல்வி நிறுவனமான விடுதியுடன் கூடிய இளம் பெண்கள் பள்ளியாக மறுசீரமைப்பு செய்வதற்கு முடிவு செய்து அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்கள். இரண்டு ஆண்டுக்குள் பிரெஞ்சு மற்றும் மேற்கத்திய கட்டிடக்கலையில் இந்த பள்ளி கட்டப்படவுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலை புறக்கணிக்கிறேன்” - அதிமுக வேட்பாளர் ஆவேசம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
"I will boycott the election" - AIADMK candidate's obsession

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் புதுவை அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வாக்கிற்கு ரூ. 500, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் ரூ. 200 கொடுத்துள்ளனர். இதன் மூலம் மக்களை கொச்சைப்படுத்தும் தேர்தலாக மீண்டும் மாற்றி விட்டனர். இந்த தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டிய தேர்தல். இந்த தேர்தல் அடுத்து வரும் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிவிட வேண்டிய ஒரு தேர்தல் ஆகும். மீண்டும், மீண்டும் பணம் கொடுத்துதான் வெற்றி பெறுவேன். மீண்டும், மீண்டும் மக்களை ஏமாற்றிகொண்டு தான் இருப்பேன் என்று நினைக்கிறார்கள். எனவே நான் இந்த தேர்தலை புறக்கணிக்கிறேன்” என ஆவேசமாகத் தெரிவித்தார். 

Next Story

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Election campaigning in Tamil Nadu ends with evening

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவின்போது விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

அதே சமயம் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் உள்ள 92 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.