
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது.
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தினமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகின்றது. இதனால் கல்வி நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள் கடந்த 6 மாதத்திற்கு மேலாக மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று இதுவரை உறுதியாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மேற்குவங்கத்தில் இந்தக் கல்வியாண்டில் படிக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இந்த அறிவிப்பை செய்யாத நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா இந்தத் துணிச்சல் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.