Published on 15/09/2020 | Edited on 16/09/2020
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் எனக் கரோனா தொற்று அடுத்த கட்ட பாய்ச்சல் எடுத்து வருகின்றது. இதனால் நாடு முழுவதும் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் மட்டும் 76 லட்சம் பரிசோதனைகளை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 5.8 கோடி பரிசோதனைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாராதத்துறை தெரிவித்துள்ளது.