Skip to main content

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019



தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்தார் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி.  அதன்படி, உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. டிசம்பர் 27- ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும், டிசம்பர் 30- ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறும் என்று தெரிவித்தார்.

 

film




மேலும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அடுத்தாண்டு ஜனவரி 2 ஆம்  தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 13 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மனுவை திரும்ப பெற டிசம்பர் 18- ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.  வேட்பு மனு மீதான பரிசீலனை டிசம்பர் 16- ஆம் தேதி நடைபெறுகிறது . ஊரக உள்ளாட்சித் தேர்தல் காலை 07.00 மணிக்கு தொடங்கி மாலை 05.00 மணியுடன் நிறைவடைகிறது. 

 

சார்ந்த செய்திகள்