தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வர் ஒபிஎஸ் தொகுதியான போடி தொகுதியில் இருக்கும் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் மத்திய அரசு நியூட்ரினோ திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுத்து . ஆனால் இதன்மூலம் அப்பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அதோடு மனித உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று கருதிய அப்பகுதி மக்கள் இத்திட்டம் கொண்டு வர கூடாது என தொடந்து போராடி வருகிறார்கள். அதுபோல் வைகோ உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் இந்த நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக கடந்த 31ம்தேதி மதுரையில் இருந்து கம்பம் கூடலூர் வரை பத்து நாட்கள் நடைபயணத்தை வைகோ தொடங்கினார். இந்த நடைபயணத்தை திமுக செயல்தலைவரான ஸ்டாலின் தொடங்கி வைத்ததின் பேரில் மதுரையில் இருந்து செக்கானூரணி. உசிலம்பட்டி வழியாக ஆண்டிபட்டி, தேனி, போடிக்கு வந்தவர். இன்று 6ம்தைதி காலை ஏழுமணிக்கு எல்லாம் மீண்டும் நடைபயணத்தை தொடங்கினார்.
போடியிலிருந்து சில்லமரத்துப்பட்டி சிலமை வழியாக ராசிங்கபுரம் வந்த வைகோவுக்கு வழி நெடுகவும் மக்களும் கூட்டணி கட்சிகார்களும் அங்கங்கே நின்று மலை, சால்வைகள் போட்டு வைக வை உற்சாக படுத்தினார்கள் . அதன் பின் தனது பிரச்சார வேனில் ஏறி மக்கள் முன்பேசிய வைகோவோ....மத்திய அரசு கொண்டு வர இருக்கும் நியூட்ரினோ திட்டம் மூலம் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் மத்தியில் எடுத்து கூறி பிரச்சாரம் செய்தார். அதோடு துணை முதல்வரான ஒபிஎஸ் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்துள்ளார் என்றும் சுற்றுசூழல் வாரியம் இந்த நாசகர திட்டம் செயல்பட அனுமதி கொடுத்து விடாதீர்கள். இந்த சமுதாயம் உங்களை காரிதுப்பிவிடும். அதுபோல் முதல்வராக உள்ள இபிஎஸ்சும் கூட இனி கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி முதல்வராக முடியாது. அதுனால இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுத்து பழி பாவத்தை தலையில் சுமக்காதீர்கள் என இபிஎஸ்சையும், ஒபிஎஸ்சையும் ஒரு பிடித்து விட்டு ராசிங்க பூரத்தில் மதிய உணவை கட்சி பொருப்பாளர்கள், தொண்டர்கள் விவசாய மக்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஒய்வு எடுத்தவர் மாலை 4மணிக்கு மீண்டும் நடைபயணத்தை தொடங்கியவர் சின்ன பொட்டிபுரம், பெரியபொட்டிபுரம் வழியாக புதுக்கோட்டைக்கு வந்து தங்கி இருக்கிறவர் மீண்டும் நடைபயணத்தை தொடங்க இருக்கிறார்.