Skip to main content

பெங்களூர் கட்டிட விபத்து சம்பவம்; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 23/10/2024 | Edited on 23/10/2024
Rising toll  Bangalore building accident incident

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பட இடங்களில் மழை நீர் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில், பாபுசபாளையத்தில் கட்டப்பட்ட வந்த 6 அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் ஒன்று நேற்று (22-10-24) மாலை திடீரென இடிந்து விழுந்தது. இதில், கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பல்வேறு தொழிலாளர்கள், இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். 

கட்டிடத்துக்கு வெளியே வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், இந்த இடிபாடுகளில் இருந்து தப்பி, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர், இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சுமார் 16 மணி நேரத்திற்கு மேலாக நடந்து வரும் மீட்பு பணியில், சிக்கிய நபர்களை கொஞ்ச கொஞ்சமாக மீட்டு வருகின்றனர். இன்று காலை வரை 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வந்த நிலையில், தற்போது  8 பேர் உயிரிழந்து பலி எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதற்கிடையில், கட்டிட விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர், ஒப்பந்ததாரர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்