Skip to main content

ஆகஸ்டு மாதம் கட்சி ஆரம்பித்து ஏப்ரலில் முதல்வராக வர பார்க்கிறார்கள் - பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேச்சு!

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பேராசிரியர் சுப.வீரபாண்டியன் இன்றைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது" திமுக என்ற கட்சி ஜாதி கட்டமைப்புக்காகவோ அல்லது மதத்திற்காகவோ உருவானது அல்ல. இன்னும் சொல்லப்போனால் ஆட்சி அமைப்பதற்காக கூட தொடங்கப்பட்டதல்ல. திமுக என்ற இயக்கம் 1949ம் ஆண்டு தொடங்கப்பட்டிருந்தாலும், 1957ம் ஆண்டு தேர்தலில் தான் அந்த கட்சி போட்டியிட்டது. ஆனால் இன்று சிலபேர் ஆகஸ்ட் மாதம் கட்சி தொடங்கி ஏப்ரல் மாதம் முதலமைச்சர் ஆகி விடலாமா என்று பார்க்கிறார்கள். அப்படி எல்லாம் தர்பார் செய்ய முடியாது.
 

hjk



திரைப்படத்தில் வேண்டுமானால் தர்பார் செய்யலாமே, தவிர அரசியலில் தர்பார் செய்துவிட முடியாது. இதை திமுக இளைஞர்கள் மக்களிடம் சென்று கூற வேண்டும். நூற்றாண்டு கண்ட இயக்கம் எங்களுடன் இருக்கிறது என்பதை உரக்க சொல்ல வேண்டும். கூடவே நான் சில செய்திகளை இங்கு சொல்ல வேண்டும். அம்மா உணவகம் என்ற ஒன்று சென்னை முழுவதும் இருக்கிறது. அது ஐந்தாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது. உண்மையை சொல்ல வேண்டுமானால் அப்போது கூட்டமாக இருக்கும். ஆனால் தற்போது எப்படி இருக்கின்றது. அம்மா உணவகத்தின் முன்பு கூட்டமில்லை. ஏனென்றால் அங்கு உணவில்லை. அம்மா உணவத்திற்கு தேவையான நிதி இல்லை. அதனால் அந்த உணவகம் பயனற்று இருக்கிறது. சென்னை மாநகராட்சி அதனை நடத்துகிறது. இதில் முக்கியமான செய்தி ஒன்று இருக்கின்றது, சில நாட்களுக்கு முன்பு வெளியான செய்தித்தாளில் அம்மா உணவகம் 400 கோடி ரூபாய் கடனில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. என்ன காரணம் என்றால் மத்திய அரசு தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, உள்ளாட்சிகளுக்கு தர வேண்டிய பல 16,000 ஆயிரம் கோடி ரூபாயை கடந்த மூன்றாண்டுகளாக தரவில்லை. இன்றைக்கு சிஏஏ என்ற சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை பற்றி இளைஞர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சட்டத்தை எதிர்த்து இன்றைக்கு இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட மூன்று அண்டை நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். இந்த எதேச்சதிகார தன்மையை எதிர்த்து இன்றைக்கு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. மோடி அரசின் இந்த ஆறு ஆண்டுகாலத்தில் இதுவரை சந்திக்காத அளவிற்கு போராட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றது. அண்மையில் வள்ளுவர் கோட்டத்தில் சிஏஏ சட்டத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். எதையாவது எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி நாம் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதை நாம் முதன் முதலாக கேள்விப்படுகிறோம். இன்றைக்கு ஈழ தமிழர்களுக்கு குடியுரிமை இல்லை என்பதற்கு முக்கியமான காரணம் அதிமுக தான். அவர்கள் அளித்த வாக்கின் காரணமாகவே இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்களை அந்நியர்களாக மாற்றுவதற்கு பாஜகவுக்கு உதவுகின்ற கட்சி அதிமுக தான் என்பதை இளைஞர்கள் நாட்டு மக்களுக்கு சொல்லுங்கள். திமுகவில் இஸ்லாமிய மக்கள் ரத்தமும் சதையுமாக இருப்பவர்கள். மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கின்ற இயக்கமாகவே திமுக உள்ளதையும் எடுத்துச் சொல்லுங்கள்" என்றார்


 

சார்ந்த செய்திகள்