Skip to main content

பணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா?

Published on 21/02/2019 | Edited on 21/02/2019
suny


இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்று பலர் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர்களிடம் கோப்ரா போஸ்ட் என்ற பத்திரிகை நிறுவனம் நடத்திய புலனாய்வு செம வைரலாகியுள்ளது. அந்த புலனாய்விற்கு பெயர்  ‘ஆபரேஷன் கரோக்கி’. இந்த ஆபரேஷனின் நோக்கம் என்ன என்றால்,  ‘பாலிவுட் நடிகர்களிடம், நீங்கள் கேட்கும் பணத்தை தருகிறோம் நாங்கள் சொல்லும் கட்சிக்கு உங்களின் சமூக வலைதளத்தில் மறைமுகமாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்’ என்பது ஆகும். இது லீகல் கிடையாது, இல்லீகலாக பிரச்சாரம் செய்யப்போகிறீர்கள். கட்சிக்கு ஆதரவாக பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் பணமாக உங்களிடம் தரப்படும். செக், பேங்க் ட்ரேன்ஸ்ஃபர் போன்று எந்த சிக்கலும் இல்லை என்று அந்த வீடியோவில் பார்க்கிற பிரபலங்களிடம் சொல்கிறார்கள். 36 பிரபலங்கள் இவர்கள் சொல்லும் கட்சிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பிரச்சாரம் செய்ய ஒப்புக்கொள்கிறார்கள். இந்த ஆபரேஷன் கரோக்கி 60 நிமிட ஆவணப் படமாக எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆபரேஷனில் நடிகர்கள் மட்டுமில்லை பாலிவுட்டைச் சேர்ந்த பின்னணி பாடகர்கள், காமெடியன்கள், கதாபாத்திர நடிகர்கள் என்று பாலிவுட்டில் இருக்கும் பல துறை பிரபலங்களிடம் சென்று இவ்வாறு கேட்கிறார்கள். லட்சக்கணக்கான பொதுமக்கள் சமூக வலைதளத்தில்  இந்த 36 பிரபலங்களையும் பின் தொடர்கிறார்கள். அந்த 36 பிரபலங்களின் பெயர், அபிஜீத் பட்டாச்சாரியா, கைலாஷ் கெர், மிகா சிங், பாபா செகல், ஜாக்கி ஷராஃப், சக்தி கபூர், விவேக் ஓபராய், சோனு சுத், அமீஷா படேல், மஹிமா சௌத்ரி, ஷெரயாஸ் தல்பாதி, புனித் இஷார், சுரேந்தர பால், பங்கஜ் தீர், நிகிதின் தீர், டிஸ்கா சோப்ரா, தீப்ஸிகா நாக்பல், அகிலேந்திர மிஷ்ரா, ரோஹித் ராய், ராஹுல் பட், சலிம் ஜெய்தி, ராக்கி சாவந்த், அமன் வெர்மா, ஹிதேன் தேஜ்வானி, கௌரி பிரதான், ஈவ்லின் ஷர்மா, மினிஷா லம்பா, கொயினா மித்ரா, பூனம் பாண்டே, சன்னி லியோன், ராஜு ஸ்ரீவஸ்தாவா, சுனில் பால், ராஜ்பால் யாதவ், உப்சனா சிங், க்ருஷ்ணா அபிஷேக், விஜய் இஷ்வர்லால் பவார், கணேஷ் ஆச்சர்யா, சம்பவானா செத்.

இந்த ஆபரேஷனின்போது, நான் பணமும் வாங்கமாட்டேன், யாருக்கும் ஆதரவு தரவும் மாட்டேன் என்று சொல்லியவர்கள் வித்யா பாலன், ஆர்சத் வர்ஸி, ராஜா முராத், சௌம்யா டான்டன் ஆகிய நான்கு பேர் மட்டும்தான், இவர்கள் மட்டுமே இந்த ஆப்பரேஷனிலிருந்து சிக்காமல் தப்பித்தவர்கள்.
 

operation


சிக்கிய பிரபலங்கள் குறிப்பிட்ட ஒரு சில கட்சிகளை ஆதரிக்க ஒரு சமூக வலைதள பதிவுக்கு லட்சத்திற்கு மேல் பணம் கேட்டிருக்கின்றனர். சிலர் எட்டு மாதம் வரை நான் தினசரி பதிவிட 2 கோடி வேண்டும் என்று காண்ட்ராக்டே போடும் அளவிற்கு கேட்டிருக்கிறார்கள். இதெல்லாம் அந்த ஆவணப் படத்தில் பதிவாகி இருக்கிறது. அதுவும் பணமாகவே வேண்டும் என்கின்றனர். அப்படி என்றால் அவை அனைத்தும் கருப்பு பணமாகவே பதுக்கப்படும். அந்த வீடியோவில் சில பிரபலங்கள் பேசியது பின்வருமாறு.

சன்னி லியோன் - நான் சமூக வலைதளத்தில் மறைமுக பிரச்சாரத்திற்கு ஒப்புக்கொண்டால் என் கணவருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று பேரம் பேசுகிறார்.


சோனு சுத் - எட்டு மாத காண்ட்ராக்ட்டுக்கு எனக்கு 20 கோடி வேண்டும்


கைலாஷ் கெர்-  நீங்கள் என் டீமுடன் பேசுங்கள், எனக்கு இது ஓக்கேதான்.


ராக்கி சாவந்த் - கடந்த முறை நான் ராஜ்நாத் ஜீக்காக வேலை செய்தேன் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.


இதுபோல பலர் சமூக வலைதளத்தில் கட்சிகளுக்கு காசு வாங்கிகொண்டு மறைமுகமாக பிரச்சாரம் செய்ய தயாராகவே இருக்கின்றனர். அதற்கு கொள்கை, நலன் எதையும் பொருட்டாகவே அவர்கள் யோசிக்கவில்லை, பணம் தாருங்கள் பிரச்சாரம் செய்கிறேன் என்கிற நிலையில்தான் பிரபலங்கள் இருக்கிறார்கள். சில பிரபலங்களுக்கும் இதில் விதிவிலக்கு உண்டு.

 

 

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.