மதுரை ஒத்தக்கடையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சீமான் பேசினார். அப்போது, '' யாரை தீவிரவாதி, பயங்கிரவாதி என்று அனைவரும் சொல்கிறார்களோ அவரை வைத்தே, அவரின் கொள்கையை வைத்தே தமிழ் தேசிய இனத்தை கட்டமைப்போம். அவரை வைத்தே இந்த இனத்தை எழுச்சி பெற வைப்பேன். என் பிள்ளைகள் மீது வழக்கு போடலாம், வன்முறைகளை கட்டவிழ்த்து விடலாம், விடிய விடிய சிறை வைக்கலாம். அவர்களை எல்லாம் ஒரு நோட்டில் எழுதி வைத்திருக்கிறேன். தயவு செய்து கேட்கிறேன் என்னிடம் அதிகாரம் வருவதற்குள் நீங்கள் எல்லாம் இறந்து விடுங்கள். இல்லையென்றால் உங்களை கொன்று அந்த கொலை பழியை நான் ஏற்க வேண்டிவரும்.
இது என் அன்பான வேண்டுகோள், செத்துபோயிடுங்க. தனக்கு பிடித்த நடிகர்களை படங்கள் வெற்றிபெற வேண்டும் என்று கூறி மண் சோறு சாப்பிடும் ரசிகர்கள் இருக்கும் இந்த நாட்டில், இவர்கள் கூடவா நாம் பிறந்தோம் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. அதை நினைத்தால் தூக்கம் வராது. கவலை வரும், வேதனை வரும், துயரம் வரும், கண்ணீர் வரும் ஆனாலும் தலைவர் புகைப்படத்தை பார்க்கும்போது புதுதெம்பு வரும். போராடலாம் என்ற எண்ணம் வரும். நாங்கள் வரலாறு பேசுகிறோம், மொழி பெருமை பேசுகிறோம். உலகில் அவனவன் தாய் மொழியில் பேசுகிறான். நாங்கள் மொழிகளுக்கெல்லாம் தாயான எங்கள் தமிழ் மொழியில் பேசுகிறேன்.

ஜெயலலிதா இறந்து போயிடுமோனு கொஞ்ச பேரு இறந்து போனான், ஜெயலலிதா இறந்து போனத்துக்கு கொஞ்சம் பேரு இறந்து போனான், எம்.ஜி. ஆர் இறந்து போனத்துக்கு கொஞ்சம் பேரு இறந்து போனான். இந்திரா காந்தி இறந்து போனதற்கு 17 பேர் இறந்து போனான். இறந்தவன் அத்தனை பேரும் தமிழர்கள். ஒரு புத்தகத்தில் இந்த உண்மைகள் எல்லாம், தமிழன் ஏன் அடிமையானான் என்ற தலைப்பில் இருக்கிறது. தமிழன் மனத்தால் பலகீனமானவனாக அப்போது இருந்திருக்கிறான். அவர்களை மாற்ற வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அந்த மாற்றத்தை செய்து வருகிறேன் என் தம்பி, தங்கைகளோடு. தனக்கு பிடித்த சினிமா நடிகர்களின் படங்கள் ஓடவில்லை என்று கூறி சில ரசிகர்கள் இறந்து போறார்கள். அவர்களை எப்படி திருத்துவது. இதை பார்க்கும் மற்றவர்கள் இது என்ன மடையர்கள் கூட்டம் என்று நினைக்க மாட்டார்களா?
இவர்களை அனைவரையும் தலைவரின் படத்தை காட்டி மாற்றுவேன். நான் இறக்கும் வரைக்கும் போராடுவேன். இல்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு கடத்துவேன். திரைத்துறையினருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தமிழகத்தில் மட்டும்தான். கேரளாவைப் பாருங்கள். அந்த மாநிலத்தில் நடிகர்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். திறமையான நடிகர்கள் இருந்தாலும் அவர்களைத் தலைவர்களாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கேரள மக்களின் புரிதல் தமிழர்களுக்கு இல்லை. ராணுவ வீரர் ஓய்வு பெற்றால் ஏதாவதொரு நிறுவனத்துக்கு காவலாளி வேலைக்குச் செல்கிறார். ஆனால், நடிகர்கள் மட்டும் ஓய்வு பெற்றால் நேரடியாக முதலமைச்சராக வேண்டும் என்று நினைக்கிறார்கள்நடிகர்கள் தாங்கள் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி, மக்கள் வாழ வேண்டும் என்று நினைக்கிறது. தமிழினத்துக்குத் துரோகம் செய்த தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களின் லட்சியமாகும்'' என்றார்.