பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்து என்பதால் அவரது பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும், அவர் திறந்தவெளி வாகனங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும், மத்திய அமைச்சர்கள் கூட அவரிடம் நெருங்கி வரக்கூடாது என்றெல்லாம் உலகத்துக்கே அட்வைஸ் கொடுக்கும் நம் பிரதமருக்கே அட்வைஸ் செய்யும் ஒரு படை இந்தியாவில் இருக்கிறது. அதுதான் எஸ்பிஜி என்று சொல்லப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழு. பழங்காலத்தில் மன்னரின் உயிரை காப்பாற்றுவதற்கென்றே ஒரு படை இருப்பார்கள். அதுபோல இவர்கள் பிரதமரைப் பாதுகாக்கும் நவீன படை. கோட் சூட்டுடன், கூலீங் கிலாஸ், காதில் இயர்போன் என்று பார்க்க ஆங்கிலப்பட ஸ்பை போன்றே இருப்பார்கள்.
![spg](http://image.nakkheeran.in/cdn/farfuture/mt5LRMuUxlZZd_F69E1yFXmfEDyAUcLCmD5tEwhglUk/1533347618/sites/default/files/inline-images/1_47.jpg)
இந்த எஸ்பிஜி குழுவின் தலைமை இயக்குனராக இருப்பவர் அருண்குமார் சின்ஹா. அமைச்சரவை செயலகத்தின் கீழ் இயங்கும் இந்தப் படையில் உளவுத்துறை மற்றும் மாநில காவல்துறையும் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்தக் குழு பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு தருகின்றனர். சில முன்னாள் பிரதமர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்றால் இவர்கள்தான் பாதுகாப்பு அளிக்கிறார்கள்.
அப்படி என்ன மாதிரியான ஆயுதங்கள், வாகனங்கள் இவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்....
|
![spg weapon team](http://image.nakkheeran.in/cdn/farfuture/lYc0BpCoCRhiUutGGyyyvRGR4GGk3_hkNmmuzAfGT5w/1533347618/sites/default/files/inline-images/2_41.jpg)
இவர்கள் தங்கள் உடலில் எங்கெல்லாம் இடமிருக்கிறதோ அங்கெல்லாம் ஆயுதம் கொண்டு நிரப்புகின்றனர் என்றே சொல்லலாம். FN Herstal F2000 என்கிற ரைபில் வகை துப்பாக்கி, FN Herstal five-seven, glock 12 9*19mm, glock 19 போன்ற பிஸ்டல் வகை துப்பாக்கிகள், FN Herstal p90 என்கிற சக்திவாய்ந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பிரதமரின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்துகின்றனர்.
![spg motorcrade](http://image.nakkheeran.in/cdn/farfuture/5MAWNbi6_QxWpjR44TfEn8bB93Ajm603RuqBrDOvnS8/1533347620/sites/default/files/inline-images/3_40.jpg)
வாகனங்கள் என்று பார்த்தால், பிரதமர் பயணம் செய்வது bmw 7 series sedan கார். இது Kalashnikov எனப்படும் சக்திவாய்ந்த துப்பாக்கியின் தோட்டாக்களையே தடுத்து நிறுத்தும் அளவிற்கான புல்லட் ப்ரூப் கண்ணாடிகளை கொண்டது. எத்தகைய தட்பவெப்ப நிலையையும் தாங்கும் சக்தி, டயரில் காற்று இல்லாமலேயே பல கிலோமீட்டர்களுக்கு வேகமாக ஓடக்கூடியது. பிரதமருடன் வரும் எஸ்பிஜி அணிக்காக bmw x வகை கார்கள் பயன்படுத்தப்படுகின்றன, பிரதமர் காருடன் எஸ்பிஜி அணியைச் சேர்ந்த 5 கார்கள் பாதுகாப்பிற்காக வரும். மெடிக்கல் வசதிக்காக இந்த கார்களுடனே mercedes-benz sprinter வேன் வருகிறது. பிரதமர் வெளிநாடு செல்வதற்கு என்று தனி விமானம் முதல் உள்ளூரில் பயணம் செய்ய ஹெலிகாப்டர் வரை அனைத்திலும் இவர்கள் இருப்பார்கள். சகல அதிகாரமும் கொண்ட இந்த படையின் மீது, எந்த நீதிமன்றத்திலும் வழக்கு போட இயலாது. எல்லாம் பிரதமரின் டைரக்ட் கண்ட்ரோல்தான்.