ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஜாம்பவான், உலக கிரிக்கெட் வீரர்களின் கனவு வீரர் டான் பிராட்மென்னின் 110வது பிறந்தநாள் இன்று. தான் விளையாடிய 20 வருடங்களில் நடந்த மொத்த டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை 50 மட்டுமே ஆனால் அதில் அவர் குவித்த ரன்கள் 6,996. அவரது சராசரி 99.94 இன்றுவரை இந்த சராசரியை தொட முயற்சித்தும் யாராலும் முடியவில்லை.
இந்த ஜாம்பவான் பிராட்மன் ஒரு நாளில் உருவாகவில்லை. கடுமையான பயிற்சி மட்டுமே அவரை உருவாக்கியது. ஒரு கோல்ஃப் பந்து, ஒரு வளைந்த சுவர், பேட், ஸ்டம்ப் இது மட்டுமே அவரின் பயிற்சி களம், சுவற்றில் அடித்து, அடித்துதான் அவர் கற்றுக்கொண்டார். அப்படியே படிப்படியான உயர்வுதான் அவரை உச்சத்திற்கு கொண்டுவந்தது.
தன்னுடைய முதல் சதத்தை பள்ளி அணியில் அவர் விளையாடியபோது படைத்தார், அந்த போட்டியில் அவர் 115 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். அந்த அணியின் மொத்த ரன் 156 மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. செயின்ட் ஜார்ஜ்-ல் விளையாடுவதற்காக அவர் ஒவ்வொரு போட்டிக்கும் 130 கிலோமீட்டர்கள் செல்ல வேண்டியிருந்தது.
லீட்ஸ், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஒரு நாளில் அவர் எடுத்த ரன்கள் 309. இதுதான் ஒரு குவித்த அதிகபட்ட ரன்களாக இருந்தது. அந்த போட்டியில் அவர் மொத்தல் 334. 1947-48ல் நடந்த இந்திய சுற்றுப்பயண ஆட்டத்தில் பிராட்மன் 172 ரன்களை குவித்தார். முதல் தர நூறு ரன்கள் என்ற வரிசையில் அடித்த நூறாவது சென்சுரி அது.
அவர் இறந்தபின்பு அவரை கவுரவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய அரசாங்கம் 20 சென்ட் நாணயத்தில் அவர் முகம் பொறித்து வெளியிட்டது. அதுமட்டுமின்றி அவர் உயிருடன் இருக்கும்போதே அஞ்சல் அட்டையில் அவரது முகத்தை பொறித்து வெளியிட்டது. உயிருடன் இருக்கும்போதே அஞ்சல் தலையில் இடம்பெற்ற முதல் ஆஸ்திரேலியர் இவர்தான்.
பிராட்மென்னிற்கும் சச்சினுக்குமான உறவு குறிப்பிடத்தக்கது. சச்சினின் ஆட்டம் என்னைப்போன்றுள்ளது என்று கூறிய பிராட்மன் தனது கனவு அணியில் ஒருவராக சச்சினை குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இருவரும் பிராட்மனின் 90வது பிறந்தநாளில் சந்தித்ததுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. சச்சின் தனது குரு பிராட்மென் என்று குறிப்பிட்டுள்ளார்.