ஒரு குழந்தை பேசும் முதல் வார்த்தை "அம்மா". ஆனால் அந்த அம்மா என்ற வார்த்தையையும் தனது மழலை மொழியில் தத்தி தத்தி பேச ஆரம்பிக்கும் போது அந்த குழந்தையின் வயது இரண்டாக இருக்கும் அல்லது இரண்டு வயதை கடந்திருக்கும்.
ஆனால் கோவையை சேர்ந்த வெண்பா என்ற ஒன்னே முக்கால் வயதான பெண் குழந்தை தனது ஒன்னே முக்கால் வயதில் 500 க்கும் மேற்பட்ட ஆங்கில வார்த்தைகளை கூறி அசத்தி வருகிறாள். இதற்காக " இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், பெஸ்ட் ஆப் இந்தியா, வேர்ல்ட் இந்தியா ரெக்கார்ட்ஸ்"உள்ளிட்ட சாதனைகளுக்கான விருதை பெற்றுள்ள வெண்பாவின் பெயர் "கின்னஸ் ரெக்கார்ட்" க்கும் பரிந்துரைக்கப்பட்டு வெண்பாவிற்கு அடுத்த மாதம் கின்னஸ் விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த சரவணகுமார், சுகன்யா தம்பதிகளின் 1 3/4 வயதான பெண் குழந்தைதான் வெண்பா. அதீத ஞாபக சக்தி உடைய இந்த குழந்தை 500க்கும் மேற்பட்ட வார்த்தைகளை ஞாபகமாக கொண்டு, படங்களில் உள்ள பழங்கள், காய்கறிகள், விலங்குகள், தேசிய தலைவர்களின் பெயர்களை தனது மழலை மொழியில் துள்ளியமாக கூறும் வெண்பா, பெயர்களை கூறினால் அதற்கான படங்களை அடையாளம் கண்டு எடுத்து காட்டி அசத்துகிறாள். அது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களின் பெயர்களை கூறினாள் அதன் தலை நகரங்களின் பெயர்களை தங்கு தடையின்றி, பிழை இல்லாமல் தனது கொஞ்சும் மழலை மொழியில் கூறி ஆச்சரியபடுத்துகிறாள் வெண்பா.
அதுமட்டுமல்லா மத்திய அமைச்சர்களின் பெயர்களை ஓரளவிற்கு இப்போது கூறும் வெண்பா, திருக்குறளையும் தனது பெற்றோரிடம் இருந்து கற்று ஒப்புவிக்கிறாள்.இதற்காகதான் வெண்பாவிற்கு முக்கிய விருதுகளான "இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், "பெஸ்ட் ஆஃப் இந்தியா", "வேர்ல்ட் இந்தியா ரெக்கார்ட்ஸ்" போன்ற மிகச்சிறந்த விருதுகளை வெண்பா பகுழந்தையின் வெண்பாவின் சிறப்பம்சமே இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் தலை நகரங்களை கூறி தனது ஞாபக சக்தியால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறாள். இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளது, அதன் தலை நகரங்கள் எவை என்று கேட்டால் நமக்கே சொல்ல தெரியாது. ஆனால் வெண்பாவோ மாநிலத்தில் பெயர்களை சொன்னாலே அதன் தலை நகரத்தின் பெயரை பிழை இல்லாமல் கூறி நம்மை ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்து செல்கிறாள்.
வெண்பா ஒரு வயதாக இருக்கும் போது அவளுக்கு விளையாடுவதற்கு பொம்மைகள் வாங்கி கொடுத்த போதும், விலங்குகள், பழங்கள், காய்கறிகள், விமானம், பேருந்து, ரயில், உள்ளிட்ட படங்களை உள்ளடக்கிய சார்டுகள் மீது தான் வெண்பாவின் கவனம் சென்றுள்ளது. அதில் உள்ள படங்களை கை வைத்து காட்டி தனது சுட்டி சேட்டைகளால் தனது அம்மாவிடம் விளக்கம் கேட்டிருக்கிறாள் வெண்பா. அவளின் ஆர்வத்தையும், ஞாபக சக்தியையையும் புரிந்து கொண்ட வெண்பாவின் பெற்றோர், அதன் பெயர், அதன் பயன்பாடு குறித்து கூற, அதை ஒரே ஒரு முறை கேட்டுக்கொண்ட பின் அவளாகவே அதனை கூற ஆரம்பித்துவிட்டாள்.
இரண்டு வயது நிரம்பிய குழந்தைகளே அம்மா என்று அழைக்க முடியாமல் தவிக்கும் இந்த கால கட்டத்தில் ஒன்னே முக்கால் வயதான வெண்பாவின் இந்த சாதனை போற்றுதலுக்குறியதே.பல குழந்தைகள் ஒரு நாட்டின் தேசிய கொடியை காட்டினால், அந்த நாட்டின் பெயரை கூறுவது வழக்கம் தான். அதற்காக பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் அந்த குழந்தைகள் மூன்று முதல் ஐந்து வயதுள்ள குழந்தைகளாகவோ, அல்லது ஐந்து வயது மேற்பட்ட குழந்தைகளாகவோ இருந்துள்ளனர்.
ஆனால், உலக அளவில் இன்பேண்ட் " INFANT" என்றால் அது இரண்டு வயதிற்குள் இருக்கும் குழந்தைகள் தான். அந்த வகையில் இன்பேண்ட் குழந்தை இவ்வளவு பெரிய சாதனை படைத்திருப்பது வெண்பாதான். இந்த வெண்பாதான் அடுத்த மாதம் கின்ன்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்சிலும் இடம் பெற போகிறாள். இந்த வயதிலேயே இவ்வளவு நியாபக திறன் கொண்டு விளங்கும் வெண்பா ஒரு " PRIDE OF COIMBATORE" என்று அழைக்கப்படுவாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு சாதனையாளன் இருப்பான். அதனை கண்டறிய வேண்டியது பெற்றோர்கள் தான். வெண்பாவின் பெற்றோர், தக்க சமயத்தில் அவளது ஆர்வத்தையும், திறமையையும், ஞாபக சக்தியையும் புரிந்து கொண்டு ஒன்னே முக்கால் வயதில் இத்தனை விருதுகள், அடுத்ததாக அடுத்த மாதம் கின்னஸ் விருது பெற வைக்க அளவிற்கு அவளை ஊக்க படுத்தியுள்ளனர்.
இன்றைய சூழ்நிலையில், பிறந்த குழந்தையின் கையில் செல்போன்களை கொடுத்து விட்டு, ஒன்று வீட்டு வேலைகளை பார்ப்பார்கள். அல்லது குழந்தைக்கு சோறு ஊட்டும் போது செல்போனை காட்டி சோறு ஊட்டுவார்கள். ஆனால், வெண்பாவோ வீட்டு சுவற்றில் ஒட்டி வைத்துள்ள சார்டுகளை காட்டினால் மட்டுமே அம்மா சொல்லும் பேச்சை கேட்கிறாள்.
வெண்பாவை போன்ற பெண் குழந்தைகளை நாம் ஊக்குவித்தால் நமக்கு அடுத்து வரும் பெண் தலைமுறைகளை நல்ல ஒரு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அனைத்து தாய் தந்தையர்களும் தங்களது குழந்தைகளையும் தயார் செய்வார்கள்.அதற்கு வெண்பா கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து வழி வகுப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை.