கலைஞர் திருவுருவச் சிலையை அமைப்பதற்கு, தனது சொந்த நிலத்தை அளிப்பதாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி அறிவித்திருந்தார்.அதன்படி, பொங்கலூர் பழனிச்சாமிக்குச் சொந்தமான நிலமுள்ள, சிங்காநல்லூர் உழவர் சந்தைக்கு அருகில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் நடந்தது. கலைஞரின் சிலையை அமைப்பதற்கான திட்டமிடல் கூட்டமாக அது அமைந்தது.
அப்போது அந்த நிகழ்வில் கலந்துகொண்ட கட்சியினர்... "வெண்கலத்தால் கலைஞரின் சிலை அமையவிருக்கிறது... அதற்கு நிதி திரட்டவேண்டும்' என்று மைக்கில் அறிவிக்கப்பட்டதும் 5,000, 10,000 என பலர் சொல்லிக்கொண்டிருந்த நிலையில்... கோவை புறநகர் தெற்கு மாவட்ட அவைத் தலைவராய் இருக்கும் அக்சயா நாகராசன் திடீரென கூட்டத்திலிருந்து வெளியேறினார் .
"என்ன... பணம் கொடுக்கற நேரத்துல திடீர்னு அவரு கிளம்பி போயிட்டு இருக்காரே'னு சிலர் பேச ஆரம்பிக்க... அக்சயா நாகராசன் கூட இருக்கும் ராஜேந்திரன் மைக் பிடித்து ""கலைஞருக்கு சிலை அமைக்க 5 லட்ச ரூபாயை, தான் கொடுத்துவிடுவதாகச் சொல்லிவிடுங்கள்' என அக்சயா நாகராசன் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் கிளம்பிப்போனார். அவருடைய அம்மாவுக்கு உடல்நலம் குன்றியுள்ளதால் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துள்ளதாக போன் வந்ததையடுத்தே அவர் கிளம்பினார்'' என்றார்.