சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் தேஜஸ். ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்துள்ள இப்படத்தில் அன்சுல் சவுகான், ஆசிஷ் வித்யார்த்தி, விஷாக் நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஷஷ்வத் சச்தேவ் இசை பணிகளை மேற்கொண்டுள்ளார். போர் விமானங்களை ஓட்டும் பெண் விமானியாக கங்கனா நடித்துள்ள இப்படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. வசூலிலும் வரவேற்பு இல்லை. மேலும் அதிக கூட்டம் வராததால் பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் மனமுடைந்த கங்கனா, "கரோனாவுக்கு முன்பே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்தது. அதற்குப் பின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. அந்தச் சரிவு தொடர்கிறது. அதனால், திரையரங்குகளுக்குச் சென்று படங்களைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் திரையரங்கை நடத்துகிறவர்கள் வாழ முடியாது” என்று தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் வைத்திருந்தார். இருப்பினும் திரையரங்குகளில் சரிவர கூட்டம் வரவில்லையென கூறப்படுகிறது.
இந்த நிலையில் லக்னோவில் இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதில் உத்தரப்பிரேதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன் கங்கனாவும் கலந்து கொண்டார். இந்த படத்தை பார்த்து யோகி ஆதித்யநாத் அவரது கண்ணீரை அடக்க முடியாதபடி இருந்ததாக கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் உத்தரகாண்ட் முதல்வர் படத்தை பாராட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
Today hosted a screening of #tejas a film based on a soldier / Martyr’s life for honourable Chief Minister @myogiadityanath ji
As you can see in the first picture Maharaj ji couldn’t hold back his tears in the last monologue of Tejas.
“ Ek soldier kya chahta hai”
महाराज जी… pic.twitter.com/WTYHuhRwYA— Kangana Ranaut (@KanganaTeam) October 31, 2023